விளையாட்டு79 Videos

100 வது சதம் அடித்தார் “லிட்டில் மாஸ்டர்”

டாக்கா,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச அரங்கில் தனது 100-வது சதத்தை, வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார்.      கிரிக்கெட் உலகில் ‘லிட்டில் மாஸ்டர்’ என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 2011 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் (120 ரன்கள்)  தனது 98-வது சதத்தை பூர்த்தி செய்தார்.      அதனையடுத்து மார்ச் 12, 2011 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில் (111 ரன்கள்) தனது [...]

மண்டல ஹாக்கி, திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி சாதனை.

மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். அண்ணா பல்கலை கழகத்தின் ஏழாவது மண்டல ஆடவர் ஹாக்கி போட்டி ஒசூர் தனியார் கல்லூரியில் நடந்தது.இந்த போட்டிகளில் அண்ணா பல்கலை கழகத்திற்கு உட்பட்ட ஏழு கல்லூரி அணிகள் பங்கேற்றன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில் திருச்செங்கோடு செங்குந்தர்  இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்று வெள்ளி கோப்பையை பரிசாக பெற்றனர்.மண்டல ஹாக்கிப் போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களை செங்குந்தர் [...]

மாவட்ட கிரிக்கெட் போட்டி, பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு.

நாமக்கல் மாவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு முகாம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற திருச்செங்கோடு

நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் உல்லாசம், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் சிக்கினர்.

மும்பை, மும்பை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற போதை விருந்தில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த 2 ஐ.பி.எல். புனே வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். பண மழை கொட்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் சமீப காலமாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சூதாட்ட புகாரில் 2 வீரர்கள் நீக்கம், கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால், ஸ்டேடியத்தில் நுழைய 5 ஆண்டு தடை, செக்ஸ் புகாரில் ஆஸ்திரேலிய வீரர் [...]

வில்வித்தை போட்டியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் – கே.பி.ராமலிங்கம் எம்பி வலியுறுத்தல்.

ராசிபுரத்தில் தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரி பிறந்த நாளை ஒட்டி மாநில அளவிலான வில்வித்தை போட்டிகள் மின்னொளியில்  அதிசிந்தா திருமண மண்டபத்தில்  நடக்கிறது.  தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு வில்வித்தை ஆசோசியேசன் மாநில தலைவர் கேசவன் தலைமை வகித்தார். துணை செயலாளர் மணிவாசகம் வரவேற்றார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வில்வித்தை போட்டியை கே.பி.ராமலிங்கம் எம்.பி தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வில்வித்தை போட்டிகள் நடப்பது குறைந்து வருகிறது. இதற்கான விளையாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் கிடைப்பதாக போட்டியாளர்கள் கூறினர். [...]

இந்தியா-இலங்கை டுவென்டி-20 போட்டியில் இன்று மோதல்

பல்லேகேலே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியிலும் விளையாடுகிறது. இன்று டுவென்டி-20 போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. பல்லேகேலே நகரில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

கபாடி விளையாட்டில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக்க, அமெச்சூர் கபாடி கழக பொதுக்குழுவில் முடிவு

கபாடி விளையாட்டில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாற்ற அதற்கான முயற்சிகளில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடபெற்றது. கூட்டத்திற்கு கழகத்தின் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கபாடி விளையாட்டை வளர்ச்சியடை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

டாக்கா, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த முக்கியத்துவம் வாய்ந்த லீக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 330 ரன்களை சேசிங் செய்து இந்தியா சாதனை படைத்தது. விராட் கோக்லி 183 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் [...]

திருச்செங்கோட்டில் மாவட்ட தடகளப் போட்டி, 250 பள்ளிகள் பங்கேற்பு.

திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித் துறை மற்றும்  மாவட்ட இருபாலர் தடகள விளையாட்டுக் கழகங்களின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. மாணவியருக்கான தடகளப் போட்டிகள் நடந்தது.இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 250 பள்ளிகளின் மாணவிகள் பங்கேற்றனர். 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு நடந்த இத் தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குதித்து எட்டி தாண்டுதல், குண்டு [...]

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான குழு விளையாட்டுப்போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு – பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான பந்து எறிதல், கையுந்துபந்து, கூடைபந்து, கபாடி, இறகுபந்து, மேசைபந்து ஆகிய குழு விளையாட்டுப்போட்டிகள்
error: Content is protected !!