விளையாட்டு72 Videos

திருச்செங்கோட்டில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி – சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதலிடம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான 10 வது மகளிர் கைப்பந்து போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 10 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.இந்த பத்து அணிகளும்

நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கு – அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கை,  தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான குழு விளையாட்டுப்போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு – பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான பந்து எறிதல், கையுந்துபந்து, கூடைபந்து, கபாடி, இறகுபந்து, மேசைபந்து ஆகிய குழு விளையாட்டுப்போட்டிகள்

மாவட்ட கிரிக்கெட் போட்டி, பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு.

நாமக்கல் மாவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு முகாம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற திருச்செங்கோடு

வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி – 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்புவெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி – 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  வெண்ணந்தூர் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. கிராமப்புறத்தில் மாணவர்களிடையே விளையாட்டு திறனை ஊக்கவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிப்பட்டி மாரியம்மன் [...]

திருச்செங்கோட்டில் மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு போட்டி நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மற்றும் திருச்செங்கோடு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆகியவற்றின் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. 6 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு டைம் டிரையல் (ரிங்1) , ரேஸ் (ரிங்2), 1000 மீட்டர் ரேஸ் (ரிங்க்2ஏ) என பிரிவுகளாக நடைபெற்றது.இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும்  [...]

இராசிபுரத்தில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி – மங்களபுரம் மாணவர் முதலிடம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது இந்திய மாநாடு  நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிங்களாந்தபுரம் முதல் பட்டணம் வரையிலான 10வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியை நாமக்கல் சி எம் எஸ் கல்லூரி நிறுவனர்  முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாராத்தான் போட்டியானது சிங்களாந்தபுரத்தில் தொடங்கி போடிநாய்க்கன்பட்டி , பிரிவுரோடு , மற்றும் காகாவேரி வழியாக பட்டணம்  வந்தடைந்தடைந்தனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் [...]

மாநில கைப்பந்து போட்டி, இரண்டாம் இடம் பெற்ற காவல்துறை அணிக்கு பாராட்டு.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த 23 ம் தேதி தொடங்கி  26 ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் சரக அணி கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனைபுரிந்தது. இந்த அணியின் தலைவர் சதாசிவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இரண்டாம் இடம் பெற்ற கைப்பந்து அணியின் தலைவர் சதாசிவத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.கண்ணம்மாள் பாராட்டினார்.

தேசிய கால்பந்து போட்டி, நாமக்கல் மாவட்ட மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று சாதனை – கலெக்டர் பாராட்டு.

தேசிய அளவிலான எ-சைடு (A-SIDE) கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கால்பந்து போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. முதலாவது ஜுனியருக்கான தேசிய அளவில் 9 பேர் கொண்ட கால்பந்து சாம்பியன்சிப் 2013 க்கான போட்டி மே மாதம் 4 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை சௌகான் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தைச்சார்ந்த எஸ்.முகமது இப்ராஹிம், சி.மணிகண்டன், டி.தமிழ்ச்செல்வன், பிரவின்குமார், ஜே.பூவரசன், ரியாஜ்அலி உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஜுனியர்களுக்கான போட்டியில் [...]

திருச்செங்கோட்டில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி 130 மாணவர்கள் பங்கேற்பு.

திருச்செங்கோட்டில் கடந்த 25 நாட்களாக கோடைகால ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி முகாம்  திருச்செங்கோடு விருக்ஷõ குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று நாமக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஸன் சார்பில் மாவட்ட அளவிலான ஓப்பன் சாம்பியன் ஷிப் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் 130  மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ரிங்  1, ரிங் 2 என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆறு வயது முதல் 16 வயது [...]
error: Content is protected !!