விளையாட்டு78 Videos

மாநில அளவிலான வாள்சண்டை போட்டி நாமக்கல்லில் துவங்கியது

நாமக்கல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் வாள் சண்டை போட்டிக்கான துவக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் நியுபிகன் செல்லப்பா முன்னிலை வகித்தார். செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். வாள் சண்டை போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தொடங்கி வைத்தார். கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், [...]

மல்லசமுத்திரம் மஹேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய அளவிலான கூடைப் பந்து போட்டி, 35 அணிகள் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மஹேந்திரா  இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப் பந்து போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா,கேரளா, மஹாராஸ்டிரா  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றுள்ளன.லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் [...]

மாநில கைப்பந்து போட்டி, இரண்டாம் இடம் பெற்ற காவல்துறை அணிக்கு பாராட்டு.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த 23 ம் தேதி தொடங்கி  26 ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் சரக அணி கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனைபுரிந்தது. இந்த அணியின் தலைவர் சதாசிவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இரண்டாம் இடம் பெற்ற கைப்பந்து அணியின் தலைவர் சதாசிவத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.கண்ணம்மாள் பாராட்டினார்.

ஐ.பி.எல் கிரிக்கெட், மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அணியின் நலன் கருதி இந்த ஆட்டத்திலும் பெங்களூர் கேப்டன் டேனியல் வெட்டோரி விலகிக் கொண்டதால், அந்த அணியை விராட் கோக்லி வழிநடத்தினார். மும்பை அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் அணிக்கு திரும்பினார். டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் கோக்லி முதலில் மும்பை அணியை பேட் செய்ய கேட்டுக் [...]

தென்னிந்திய வலுதூக்கும் போட்டி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி தங்கம் பெற்று சாதனை.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைபுரிந்தார். ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கான வலுதூக்கும் போட்டி ஐதராபாத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லோகேஸ்வரி கலந்து கொண்டு ஸ்குவாட் முறையில் 185 கிலோ எடையையும், பெஞ்ச் பிரஸ் முறையில் 67.5 கிலோ [...]

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-பூபதி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. பாரிசில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று முன்தினம் இரவு நடந்த கலப்பு இரட்டையர் இறுதிசுற்றில் 7-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா கூட்டணி, கிளாடியா ஜான்ஸ் இக்னாசிக் (போலந்து)-சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணையை சந்தித்தது. இதில் முதல் செட்டில் கடும் சவாலை சந்தித்த சானியா ஜோடி, 2-வது செட்டை மிக எளிதாக [...]

சேடேகான் கராத்தேவில் மாணவர்கள் சாதனை

ராசிபுரம் தாலுகா அளவிலான சேடேகான் கராத்தே அகடமி சார்பில் கராத்தே தேர்வு ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்பள்ளியில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர். அடுத்த நிலைக்கு சென்ற மாணவர்களுக்கு சான்றிதழும் புதிய நிற பெல்டும் வழங்கப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுடன் பள்ளி செயலாளர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மஹாலட்சுமி, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

திருச்செங்கோட்டில் அகில இந்திய கராத்தே போட்டி.

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் நேஷனல் ஷோடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள்  நடைபெற்றது.இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இந்த போட்டிகளுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர்கள் நாகேந்திர ராவ், ஸ்ரீநாத், வாணியம்பாடியைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ரஞ்சித்குமார், சேலம் கராத்தே பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.இந்த போட்டியில் பெண்களுக்கான கட்டா ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலம் சிக்பெண்பூர் அணி சாம்பியன் [...]

மஹேந்திரா கல்லூரியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி, திண்டுக்கல், கோவை அணிகள் முதலிடம்.

நாமக்கல்லில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில் மாணவர் பிரிவில் திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி,என்.எஸ்.வி.வி பள்ளி அணியும், மாணவியர் பிரிவில் கோவை,அல்வினியா பள்ளியும் சாம்பியன் பட்டம் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை,ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப் பந்து போட்டி நடைபெற்றது. நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் [...]
error: Content is protected !!