விளையாட்டு79 Videos

`செஸ்’ சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.2 கோடி – முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டு.

5-வது முறையாக உலக `செஸ்’ சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு நேற்று தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார். இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1992-ம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டு பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்” என்ற ஆணையத்தை உருவாக்கினார். மேலும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் [...]

100 வது சதம் அடித்தார் “லிட்டில் மாஸ்டர்”

டாக்கா,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச அரங்கில் தனது 100-வது சதத்தை, வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார்.      கிரிக்கெட் உலகில் ‘லிட்டில் மாஸ்டர்’ என அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 2011 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் (120 ரன்கள்)  தனது 98-வது சதத்தை பூர்த்தி செய்தார்.      அதனையடுத்து மார்ச் 12, 2011 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில் (111 ரன்கள்) தனது [...]

5-வது முறையாக உலக சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.

உலக செஸ் போட்டியில் இஸ்ரேல் வீரரை டைபிரேக்கரில் தோற்கடித்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரும், நடப்பு சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த்-இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதில் 7-வது சுற்றில் ஜெல்பான்ட்டும், 8-வது சுற்றில் ஆனந்த்தும் வெற்றி பெற்றனர். [...]

ஆசிய கிரிக்கெட் போட்டி: இறுதிக்குள் நுழைந்தது வங்காளதேசம், போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா.

டாக்கா, ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் கடைசி லீக்கில் இலங்கையை தோற்கடித்து முதல் முறையாக வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வாய்ப்புக்காக காத்திருந்த இந்தியா வெளியேறியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான 11-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தொடரின் கடைசி லீக்கில் இலங்கை-வங்காளதேச அணிகள் நேற்று மோதின. தொடர்ச்சியான இரு தோல்வியால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு இந்த ஆட்டம் [...]

ஆசிய கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

டாக்கா, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த முக்கியத்துவம் வாய்ந்த லீக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 330 ரன்களை சேசிங் செய்து இந்தியா சாதனை படைத்தது. விராட் கோக்லி 183 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மிர்புரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் [...]

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் பரபரப்பு, 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஜோகோவிச் மீண்டும் சாம்பியன்

மெல்போர்ன்,ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பைனலில் ரபேல் நடாலுடன் நேற்று மோதிய அவர் 5 மணி 53 நிமிட நேரம் போராடி முதல் பரிசாக ரூ.12 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரம் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த 16ம் தேதி மெல்போர்ன் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. [...]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 272 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்.

அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் மலைபோல் ரன்களை குவித்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 604 ரன்களுடன் `டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. கவுதம் [...]

இந்தியா-இலங்கை டுவென்டி-20 போட்டியில் இன்று மோதல்

பல்லேகேலே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியிலும் விளையாடுகிறது. இன்று டுவென்டி-20 போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. பல்லேகேலே நகரில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இராசிபுரத்தில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி – மங்களபுரம் மாணவர் முதலிடம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது இந்திய மாநாடு  நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிங்களாந்தபுரம் முதல் பட்டணம் வரையிலான 10வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியை நாமக்கல் சி எம் எஸ் கல்லூரி நிறுவனர்  முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாராத்தான் போட்டியானது சிங்களாந்தபுரத்தில் தொடங்கி போடிநாய்க்கன்பட்டி , பிரிவுரோடு , மற்றும் காகாவேரி வழியாக பட்டணம்  வந்தடைந்தடைந்தனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் [...]

இலங்கை ஆசிய இளையோர் சதுரங்க போட்டி, வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்செங்கோடு மாணவிக்கு கலெக்டர் பாராட்டு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்துள்ள படைவீடு கிராமத்தைச் சார்ந்த பி.வி.நந்திதா ஒரு சர்வதேச சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 2011-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற இளையோர் (16 வயதிற்குட்பட்ட) சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் 2010-ம் ஆண்டு கிரிஸ் நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 2012-ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க போட்டியில் பங்கு பெற்று [...]
error: Content is protected !!