விளையாட்டு78 Videos

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-பூபதி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. பாரிசில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று முன்தினம் இரவு நடந்த கலப்பு இரட்டையர் இறுதிசுற்றில் 7-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா கூட்டணி, கிளாடியா ஜான்ஸ் இக்னாசிக் (போலந்து)-சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணையை சந்தித்தது. இதில் முதல் செட்டில் கடும் சவாலை சந்தித்த சானியா ஜோடி, 2-வது செட்டை மிக எளிதாக [...]

சேடேகான் கராத்தேவில் மாணவர்கள் சாதனை

ராசிபுரம் தாலுகா அளவிலான சேடேகான் கராத்தே அகடமி சார்பில் கராத்தே தேர்வு ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்பள்ளியில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர். அடுத்த நிலைக்கு சென்ற மாணவர்களுக்கு சான்றிதழும் புதிய நிற பெல்டும் வழங்கப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுடன் பள்ளி செயலாளர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மஹாலட்சுமி, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

திருச்செங்கோட்டில் அகில இந்திய கராத்தே போட்டி.

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் நேஷனல் ஷோடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள்  நடைபெற்றது.இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இந்த போட்டிகளுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர்கள் நாகேந்திர ராவ், ஸ்ரீநாத், வாணியம்பாடியைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ரஞ்சித்குமார், சேலம் கராத்தே பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.இந்த போட்டியில் பெண்களுக்கான கட்டா ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலம் சிக்பெண்பூர் அணி சாம்பியன் [...]

மஹேந்திரா கல்லூரியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி, திண்டுக்கல், கோவை அணிகள் முதலிடம்.

நாமக்கல்லில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில் மாணவர் பிரிவில் திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி,என்.எஸ்.வி.வி பள்ளி அணியும், மாணவியர் பிரிவில் கோவை,அல்வினியா பள்ளியும் சாம்பியன் பட்டம் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை,ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப் பந்து போட்டி நடைபெற்றது. நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் [...]

இராசிபுரத்தில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி – மங்களபுரம் மாணவர் முதலிடம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது இந்திய மாநாடு  நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிங்களாந்தபுரம் முதல் பட்டணம் வரையிலான 10வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியை நாமக்கல் சி எம் எஸ் கல்லூரி நிறுவனர்  முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாராத்தான் போட்டியானது சிங்களாந்தபுரத்தில் தொடங்கி போடிநாய்க்கன்பட்டி , பிரிவுரோடு , மற்றும் காகாவேரி வழியாக பட்டணம்  வந்தடைந்தடைந்தனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் [...]

ஐபிஎல் கிரிக்கெட், புனேயை வீழ்த்தியது பெங்களூர் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணியை தோற்கடித்து பெங்களூர் அணி 7-வது வெற்றியை பதிவு செய்தது. 5-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு புனே சுப்ரதா ராய் மைதானத்தில் நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்று வாய்ப்பை புனே வாரியர்ஸ் இழந்து விட்டதால் அந்த அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 22 வயதான ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்தினார். இருப்பினும் கங்குலி நீக்கப்படவில்லை; தானே விரும்பி [...]

மாநில அளவிலான வாள் சண்டை போட்டி – ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான வாள்சண்டை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான வாள்சண்டை போட்டி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 32 மாவட்டங்களிலிருந்து 700 –க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த [...]

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் செஸ் போட்டி கோவை மாணவர் முன்னிலை.

நாமக்கல் மாவட்ட சதுரங்கக்கழகம் சார்பில் திருச்செங்கோடு செங்குந்தர்  கலை அறிவியல் கல்லூரியில்  தமிழ்நாடு மாநில சப்ஜூனியர் செஸ் போட்டிகள் நடைபெறுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 46 மாணவிகளும், 75 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.11 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியின் நான்காவது நாளான நேற்றைய சுற்றில் 15 வயதிற்குட்பட்ட மாணவர்  பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு மாநில  ஜூனியர் செஸ் சேம்பியன் கிரிமேன் ஜா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை [...]

போக்கம்பாளயத்தில் மாவட்ட கிரிக்கெட் போட்டி.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள போக்கம்பாளையம் கிரிக்கெட் குழு நண்பர்கள் சார்பில் மூன்று நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு செல்லமுத்து தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். விஜயகுமார் வரவேற்றார். இப்போட்டிகளில் 24 அணிகள் பங்கேற்றது.இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. பத்தாயிரத்து ஒன்று, இரண்டாம் பரிசு ரூ.ஏழாயிரத்து ஒன்று, மூன்றாம் பரிசு ரூ.ஐந்தாயிரத்து ஒன்று, நான் காம் பரிசு ரூ.மூன்றாயிரத்து ஒன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில் [...]
error: Content is protected !!