விளையாட்டு72 Videos

விளையாட்டுகளுக்கான கோடைக் கால பயிற்சி முகாம் – ஆட்சியர் ஆய்வு.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு)யில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவ மாணவியர்களின் விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் இந்த பயிற்சி முகாம் 24.4.2013-ல் தொடங்கி மே 15- ஆம் தேதி வரை [...]

மாணவர்களுக்கு கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்கள்; வரும் 24.04.2013 தொடங்கி; 15.05.2013 முடிய கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது. நாமக்கல், அரசினர் ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும்(தெற்கு) 24.04.2013 முதல் 30.04.2013 வரை தடகளத்திற்கும், கபாடி போட்டிக்கு பொத்தனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குமாரபாளையம் , ஜிடிஆர் மேல்நிலைப்பள்ளி, வாழவந்திநாடு, கொல்லிமலை ஆகிய இடங்களில் 24.04.2013 முதல் 15.04.2013 முடியவும்,   நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்(தெற்கு) 24.04.2013 முதல் 08.05.2013 முடிய கூடைப்பந்து விளையாட்டிற்கும்    வசந்தபுரம் [...]

தேசிய வாலிபால் போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு.

17 வயதிற்குட்பட்டோருக்கான 59 வது தேசிய வாலிபால்  போட்டிகள் வரும் 20.04.2013 முதல் 26.04.2013 வரை குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணிக்கான தேர்வு கடந்த மாதம் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அணிக்கான பயிற்சி முகாம் பாண்டமங்கலம் R.N.ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்று வருகிறது. ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி மைதிலி உட்பட சென்னை டி.ஏ.வி பள்ளி, சென்னை ஹோலி [...]

கபாடி விளையாட்டில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக்க, அமெச்சூர் கபாடி கழக பொதுக்குழுவில் முடிவு

கபாடி விளையாட்டில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாற்ற அதற்கான முயற்சிகளில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடபெற்றது. கூட்டத்திற்கு கழகத்தின் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கபாடி விளையாட்டை வளர்ச்சியடை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபாடி [...]

மாநில வில்வித்தை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு.

      தமிழ்நாடு பீல்டு வில்வித்தை சங்கம் சார்பாக நடந்த மாநில அளவிலான உள்ளரங்க வில்வித்தை போட்டி சேலம் மகாத்மா காந்தி உள்ளரங்க விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்டம் சார்பாக சப்ஜுனியர் பெண்கள் பிரிவில் பெ.இலட்சியா முதலிடமும், ஜுனியர் ஆண்கள் பிரிவில் பாவை கல்லூரி மாணவர் ஆ.பிரசன்னா குமார் முதலிடமும், மினி சப்ஜுனியர் பெண்கள் பிரிவில் திருச்செங்கோடு எஸ்.பி.கே. பள்ளி மாணவி சி.திக்ஷனா மூன்றாமிடமும், சப்ஜுனியர் பிரிவில் செ.தேசிகா மூன்றாடமும், ஆண்கள் பிரிவில் அ.பூரண்சிங் மூன்றாமிடமும், [...]

தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு.

  சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 7 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படும் வட்டாரங்களிலிருந்து 17 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட 17 மாற்றுத்திறனாளிகளில் 3 நபர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர். பெரப்பன்சோலை கிராமத்தைச் சேர்ந்த மாலதி என்ற மாற்றுத்திறனாளி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசாக தங்கப்பதக்கமும்;, சர்க்கார் மாமுண்டியைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து [...]

போக்கம்பாளயத்தில் மாவட்ட கிரிக்கெட் போட்டி.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள போக்கம்பாளையம் கிரிக்கெட் குழு நண்பர்கள் சார்பில் மூன்று நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு செல்லமுத்து தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். விஜயகுமார் வரவேற்றார். இப்போட்டிகளில் 24 அணிகள் பங்கேற்றது.இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. பத்தாயிரத்து ஒன்று, இரண்டாம் பரிசு ரூ.ஏழாயிரத்து ஒன்று, மூன்றாம் பரிசு ரூ.ஐந்தாயிரத்து ஒன்று, நான் காம் பரிசு ரூ.மூன்றாயிரத்து ஒன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில் [...]

சேடேகான் கராத்தேவில் மாணவர்கள் சாதனை

ராசிபுரம் தாலுகா அளவிலான சேடேகான் கராத்தே அகடமி சார்பில் கராத்தே தேர்வு ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்பள்ளியில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர். அடுத்த நிலைக்கு சென்ற மாணவர்களுக்கு சான்றிதழும் புதிய நிற பெல்டும் வழங்கப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுடன் பள்ளி செயலாளர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மஹாலட்சுமி, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி, நாமக்கல் மாணவர்கள் சாதனை – ஆட்சியர் பாராட்டு.

மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிவபாக்கியம் சிறப்புப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இளநகர் சிவபாக்கியம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பள்ளி மறுவாழ்வு மைய மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற  மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், பேட் மிட்டன், கால்பந்து, ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 1 ஒரு தங்கப்பதக்கம், 11 வெள்ளி பதக்கம், [...]

உலக திறனாய்வு திறன் கண்டறியும் போட்டி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் – ஆட்சியர் வழங்கினார்.

     நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6,7,8, ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான உலக திறனாய்வு திறன் கண்டறியும் போட்டி நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் சுமார் 700 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பேசியதாவது: உலக திறனாய்வு திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு [...]
error: Content is protected !!