இந்தியா49 Videos

கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீர்க்க ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் பல ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்காமல் இருந்து வருகின்றன. நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இன்னிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

ஜூலை 22 ல், மதுரையில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் – இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு.

இந்திய விமானப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஏர்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேரடி தேர்வு முகாம் அடுத்த மாதம் ஜுலை 22 –ம் தேதி அன்று மதுரை, எம்.ஜி.ஆர். மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக சிறப்பு தேர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கணிதம், இயற்பியல், ஆங்கிலம், உள்ளிட்ட பாடங்களில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து [...]

காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி – சோனியா அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக, பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல், ஜுலை 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே குழப்பமும் தாமதமும் ஏற்பட்டு வந்தது. எந்த ஒரு கட்சிக்கோ, அல்லது கூட்டணிக்கோ புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததே இதற்கு [...]

ஆந்திரவில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் – ஒருவர் பலி, 50 பேர் காயம்.

ஆந்திர மாநிலத்தில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவது வழக்கம். அதாவது ஒரு மருந்தை உயிருள்ள ஒரு மீனின் வாயில் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகள் விழுங்க வேண்டும். இந்த மருந்தை வழங்குபவர்கள் நேற்று மருந்தை பூஜை செய்த பிறகு `காட்டேதான்’ விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கிளம்பினர். [...]

ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய முறை – கபில் சிபல் அறிவிப்பு

அடுத்த ஆண்டில் (2013) இருந்து ஐ.ஐ.டி, என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் பொது நுழைவுத்தேர்வில் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது. மாணவர் சேர்க்கையில், அவர்கள் பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மெயின் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என இரு தேர்வுகளை எழுத வேண்டும். ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கும் தலா 50 சதவீத `வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் அளிக்கப்படும். இவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் 50 [...]

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கர்நாடக அரசு பிடிவாதம்.

டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று, கர்நாடக அரசு அறிவித்தது. காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு கூட்டம், 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். ஆனால், கடந்த 10 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. மேலும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய காவிரி தண்ணீரையும் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து [...]

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31-ந் தேதி நாடு முழுவதும் “பந்த்”.

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறும்படி வலியுறுத்தி, நாடு முழுவதும் 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக [...]

அலகாபாத்தில் குண்டுவெடிப்பு – 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கரேலி என்னுமிடத்தில் உள்ள குடிசைப்பகுதி உள்ளது. அதற்கு அருகே இருந்த குப்பையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அருகே இருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். `இந்த சம்பவத்தை அடுத்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது குறித்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்’ [...]

பெட்ரோல் விலை உயர்வு – எதிர்க்கட்சிகள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளன. மத்திய அரசு நேற்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இதுபற்றி பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- மத்திய அரசு பெட்ரோல் விலையை தேவை இல்லாமல் தன்னிச்சையாக மிகவும் அதிகமாக உயர்த்தி இருக்கிறது. நியாயமற்ற இந்த விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை கட்டுப்படுத்த [...]

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1,80,000 கோடி ஊழல் மத்திய அரசு மீது புதிய குற்றச்சாட்டு.

நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு குத்தகை விட்டதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றம் முடங்கியது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களவை கூடியவுடன், ஆந்திரா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் மீராகுமார் வாசித்தார். பிறகு, கேள்வி நேரத்தை அவர் தொடங்கினார். அப்போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆந்திரா ரெயில் விபத்து பற்றி [...]
error: Content is protected !!