இந்தியா49 Videos

ரூ.550 கோடி ஊழல் குற்றச்சாட்டு, தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப்பிரிவில் தாக்கல்

புதுடெல்லி, ரூ.550 கோடி ஊழல் புகாரில், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்து சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. [...]

கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீர்க்க ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது.

நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் பல ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்காமல் இருந்து வருகின்றன. நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இன்னிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை கடந்த மாதம் 21-ந்தேதி மாவோயிஸ்டுகள் கடத்திச் செல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள 8 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்தால்தான் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிப்போம் என்ற ‘கெடு’ விதித்த மாவோயிஸ்டுகள் நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமரசம் ஆனார்கள். சத்தீஸ்கர் மாநில சிறைகளில் உள்ள மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகள் பற்றி ஆய்வு செய்து, விரைவான முடிவு எடுக்க உயர் மட்டக்குழு ஒன்று ஏற்படுத்த அரசு சம்மதித்தை எற்றுக் [...]

மத்திய மந்திரி ஹரிஷ் ராவத் திடீர் ராஜினாமா-முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி

புதுடெல்லி,  உத்தரகாண்ட் முதல்-மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியால் மத்திய மந்திரி ஹரிஷ் ராவத் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 32 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள காங்கிரஸ் கட்சி, 3 சுயேச்சை மற்றும் உத்தரகாண்ட் கிராந்திதளம் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது. மத்திய விவசாயம், பாராளுமன்ற [...]

ஆந்திரா ரெயில் விபத்து – 14 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஊப்ளியில் இருந்து பெங்களூர்  செல்லும் `ஹம்பி’ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் வழியாக சென்று மீண்டும் கர்நாடக மாநிலத்துக்குள் வந்து பெங்களூர் நகரை அடைகிறது. நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்ட ஹம்பி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.15 மணிக்கு அனந்தப்பூர்  அருகே பென்னி கொண்டா ரெயில் நிலையத்தை  நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நிலையத்தில் அதே தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று [...]

தினசரி ரூ.22.50 செலவழித்தால் ஏழை அல்லவாம் – திட்ட கமிஷன் கிளப்பியது புதிய சர்ச்சை.

புதுடெல்லி,திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 [...]

மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பேட்டி.

வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மிக சோர்வுடன் நிருபர்களிடம் பேசினார் மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார்.நேற்று இரவு 7 மணிக்கு நிந்தல்நார் மத்திய ரிசர்வு போலீஸ் முகாமிற்கு வந்த அவர் நிருபர்களிடம் பேசினார் அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:- “நான் நன்றாக இருக்கிறேன். என் விடுதலைக்கு பாடுபட்ட சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங், அரசு அதிகாரிகள், இருதரப்பு தூதர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். [...]

இன்று ரெயில்வே பட்ஜெட் – தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா?

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை, துறைக்கான மந்திரி தினேஷ் திரிவேதி இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் 2012-13 நிதி ஆண்டுக்கான ரெயில்வே வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்), திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய ரெயில்வே மந்திரியுமான தினேஷ் திரிவேதி இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்கிறார். இந்தப் பட்ஜெட் தினேஷ் திரிவேதியின் முதல் பட்ஜெட் ஆகும். பொதுவாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறபோது, பயணிகள் கட்டணம், [...]

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1,80,000 கோடி ஊழல் மத்திய அரசு மீது புதிய குற்றச்சாட்டு.

நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு குத்தகை விட்டதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றம் முடங்கியது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களவை கூடியவுடன், ஆந்திரா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் மீராகுமார் வாசித்தார். பிறகு, கேள்வி நேரத்தை அவர் தொடங்கினார். அப்போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆந்திரா ரெயில் விபத்து பற்றி [...]

ஆந்திராவில் பள்ளிக்கூட பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து – 14 குழந்தைகள் பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கூட பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், 14 மாணவ-மாணவிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பஸ்சின் டிரைவரின் கழுத்தை அறுத்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ராகுவாபுரத்தில் எல்.வி.ரெட்டி நினைவு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காக பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் அந்த பஸ்சில் [...]
error: Content is protected !!