இந்தியா49 Videos

கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் 3 நிபந்தனைகள் விதிப்பு.

ராய்பூர், கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்து உள்ளனர். நிபந்தனைகள் விவரம் அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு- *சத்தீஷ்கார் மாநிலத்தில் சிறையில் இருக்கும் 8 முக்கிய மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும். *மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தேடுதல் வேட்டையை (பசுமை வேட்டை) உடனடியாக நிறுத்த வேண்டும். *பஸ்தார் பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரை வாபஸ் பெற வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை விதித்துள்ள மாவோயிஸ்டுகள், இந்த நிபந்தனைகள் அனைத்தையும், வருகிற புதன்கிழமைக்குள் (25-ந்தேதி) நிறைவேற்ற [...]

பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரீஷ் காரே திடீர் ராஜினாமா

புதுதில்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் ஹரீஷ் காரே, இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியில் இருந்தார். தொலைக்காட்சி ஊடகவியலாளரான பங்கஜ் பச்சோரி பிரதமர் அலுவலகத்தின் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பிரதமரின் முதன்மைச் செயலர் புலோக் சட்டர்ஜியிடம் தனது பணி நியமன ஆணையைக் கொடுத்த சில மணி நேரங்களில், 65 வயதான ஹரீஷ் காரே தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவியை ராஜினாமா செய்த [...]

பாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பேச்சு.

பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது, ” மக்கள் பிரச்சனைகளுக்கு இருந்தாலும் பாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், முதல் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவையொட்டி, பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற மக்களவையும், மேல்-சபையும் காலை 11 மணிக்கு கூடின. `இந்திய பாராளுமன்றத்தின் 60 ஆண்டுகால [...]

ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி ராஜினாமா – முகுல்ராய் புதிய ரெயில்வே மந்திரியாகிறார்.

புதுடெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் நிர்ப்பந்தத்தால் ரெயில்வே மந்திரி பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி விலகினார். பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்தார். மத்திய ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி கடந்த 14-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அவரது சொந்தக்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயில் கட்டணம் உயர்த்துவது குறித்து தன்னிடம் தனது கட்சி மந்திரியான தினேஷ் திரிவேதி [...]

ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய முறை – கபில் சிபல் அறிவிப்பு

அடுத்த ஆண்டில் (2013) இருந்து ஐ.ஐ.டி, என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் பொது நுழைவுத்தேர்வில் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது. மாணவர் சேர்க்கையில், அவர்கள் பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மெயின் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என இரு தேர்வுகளை எழுத வேண்டும். ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கும் தலா 50 சதவீத `வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் அளிக்கப்படும். இவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் 50 [...]

முல்லைப்பெரியாறு அணை ஆய்வு, ஐவர் குழுவின் இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

புதுடெல்லி, முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த ஐவர் குழுவின் இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம்-கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு கேரள அரசு மறுத்து வருகிறது. மேலும், அணை பலவீனமாக இருப்பதாக கூறி அந்த பகுதியில் புதிதாக அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது உள்ள அணை [...]

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அன்னா ஹசாரே கடிதம்

புதுடெல்லி, வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரக்கோரி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி உள்பட பல தலைவர்களுக்கு அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும் கடிதங்கள் எழுதி உள்ளனர். இவர்களில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மட்டும் அன்னா ஹசாரே தனது கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- அணுசக்தி மசோதாவுக்காக உங்கள் அரசாங்கத்தை சிக்கலில் மாட்ட விட்டீர்கள். லஞ்சம்-ஊழலை ஒழிக்க கொண்டுவரப்படும் வலுவான லோக்பால் மசோதா விஷயத்தில் துணிச்சலுடன் செயல்படுங்கள். காங்கிரஸ் [...]

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்க, ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா ஹசாரே அழைப்பு

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கு கொள்ள வாருங்கள் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்து உள்ளார். ராணுவ தளபதி வி.கே.சிங், தனது பணியில் இருந்து வருகிற 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதன்பின்னர் அவருக்கு விருப்பம் இருந்தால் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்றும், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் எனவும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியதாவது:- நான் தனிப்பட்ட [...]

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், இந்தியா ஆதரிக்க முடிவு – பிரதமர் அறிவிப்பு

ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், தமிழக மக்களின் எண்ணம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் இன்று லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார். ஜனாதிபதி உரை குறித்த விளக்கவுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும் பொழுது இதனை குறிப்பிட்டார்.பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு தமிழக எம்பிக்கள் பெஞ்சினை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா தெரிவித்ததாவது:- பொழுது தமிழக மக்களின் போராட்டத்தாலும், தமிழக எம்.பிக்களின் [...]

ஆந்திரவில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் – ஒருவர் பலி, 50 பேர் காயம்.

ஆந்திர மாநிலத்தில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவது வழக்கம். அதாவது ஒரு மருந்தை உயிருள்ள ஒரு மீனின் வாயில் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகள் விழுங்க வேண்டும். இந்த மருந்தை வழங்குபவர்கள் நேற்று மருந்தை பூஜை செய்த பிறகு `காட்டேதான்’ விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கிளம்பினர். [...]
error: Content is protected !!