இந்தியா49 Videos

11 தமிழர்கள் மத்திய அரசு விருதுக்கு தேர்வு.

புதுடெல்லி, மத்திய அரசின் `பத்ம’ விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன இதில் 11 தமிழர்கள் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். கலை, மருத்துவம், தொழில், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய உயர்ந்த விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் ஒப்புதலுடன் நேற்று அறிவிக்கப்பட்டன. 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 27 [...]

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் கட்டணம் உயர்வு.

புதுடெல்லி, இன்று பாராளுமன்றத்தில் 2012-13-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே மந்திரி தினேஷ் திவேதி பகல் 12 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். ரெயில்வே பட்ஜெட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குறைந்த அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கிலோ மீட்டருக்கு குறைந்த பட்சம் 2 பைசாவும், அதிகபட்சம் 30 பைசாகவும் அதிகரிக்கிறது. சாதாரண ரெயில்வேகளில் 2-ம் வகுப்பு பயணிகள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில்வேகளில் (கிலோ [...]

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, டெல்லி சிறையில் இருந்து ஆ.ராசா விடுதலை.

புதுடெல்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆ.ராசா, திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. ஆ.ராசா (வயது 49), தொலை தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் [...]

3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஹிலாரி கிளிண்டன்

கொல்கத்தா, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்தார். இரு தரப்பு உறவு, வர்த்தக வளர்ச்சி பற்றி அவர் இந்தியத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று அவர் வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கொல்கத்தா வந்து சேர்ந்தார். மதியம் 12.55 மணிக்கு கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச [...]

அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 200 பேர் பலி

படகு கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 200 பேர் பலி ஆனார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர். ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தது. [...]

அலகாபாத்தில் குண்டுவெடிப்பு – 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கரேலி என்னுமிடத்தில் உள்ள குடிசைப்பகுதி உள்ளது. அதற்கு அருகே இருந்த குப்பையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அருகே இருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். `இந்த சம்பவத்தை அடுத்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது குறித்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்’ [...]

ஆந்திரவில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் – ஒருவர் பலி, 50 பேர் காயம்.

ஆந்திர மாநிலத்தில் மீன் மருந்து வழங்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவது வழக்கம். அதாவது ஒரு மருந்தை உயிருள்ள ஒரு மீனின் வாயில் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகள் விழுங்க வேண்டும். இந்த மருந்தை வழங்குபவர்கள் நேற்று மருந்தை பூஜை செய்த பிறகு `காட்டேதான்’ விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய கிளம்பினர். [...]

ஆந்திரா ரெயில் விபத்து – 14 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஊப்ளியில் இருந்து பெங்களூர்  செல்லும் `ஹம்பி’ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் வழியாக சென்று மீண்டும் கர்நாடக மாநிலத்துக்குள் வந்து பெங்களூர் நகரை அடைகிறது. நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்ட ஹம்பி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.15 மணிக்கு அனந்தப்பூர்  அருகே பென்னி கொண்டா ரெயில் நிலையத்தை  நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நிலையத்தில் அதே தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று [...]

ஆந்திராவில் பள்ளிக்கூட பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து – 14 குழந்தைகள் பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கூட பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், 14 மாணவ-மாணவிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பஸ்சின் டிரைவரின் கழுத்தை அறுத்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ராகுவாபுரத்தில் எல்.வி.ரெட்டி நினைவு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காக பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் அந்த பஸ்சில் [...]

இன்று ரெயில்வே பட்ஜெட் – தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா?

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை, துறைக்கான மந்திரி தினேஷ் திரிவேதி இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் 2012-13 நிதி ஆண்டுக்கான ரெயில்வே வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்), திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய ரெயில்வே மந்திரியுமான தினேஷ் திரிவேதி இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்கிறார். இந்தப் பட்ஜெட் தினேஷ் திரிவேதியின் முதல் பட்ஜெட் ஆகும். பொதுவாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறபோது, பயணிகள் கட்டணம், [...]
error: Content is protected !!