இந்தியா49 Videos

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்.

மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனையால், கடத்தப்பட்ட கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சத்தீஷ்கார் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். “கலெக்டரை விடுவிக்க வேண்டுமானால், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், பாதுகாப்பு படையினர், முகாம்களுக்கு திரும்ப வேண்டும், சிறையில் இருக்கும் பெண்கள் உள்பட 8 தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்” ஆகிய 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். மாவோயிஸ்டுகள், தங்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை [...]

11 தமிழர்கள் மத்திய அரசு விருதுக்கு தேர்வு.

புதுடெல்லி, மத்திய அரசின் `பத்ம’ விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன இதில் 11 தமிழர்கள் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். கலை, மருத்துவம், தொழில், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய உயர்ந்த விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் ஒப்புதலுடன் நேற்று அறிவிக்கப்பட்டன. 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 27 [...]

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் – சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கும், மருத்துவக்கல்வி கவுன்சிலுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் ஜகதல்பூரில் என்.எம்.டி.சி. அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த 2006-2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அகான்ஷா அடிலே மற்றும் பிரியா குப்தா ஆகிய [...]

தேசிய தீவிரவாத தடுப்பு மையத்திற்கு எதிரான தீர்மானம் தோற்கடிப்பு.

புதுடெல்லி, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பிரச்சினையில், மத்திய அரசுக்கு எதிரான திருத்த தீர்மானம் பாராளுமன்ற ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அரசுக்கு ஆதரவாக 227 ஓட்டுகளும், எதிராக 145 ஓட்டுகளும் கிடைத்தன. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த 12-ந் தேதி அன்று, இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றினார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. ஜனாதிபதியின் உரையில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது [...]

காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி – சோனியா அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக, பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல், ஜுலை 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே குழப்பமும் தாமதமும் ஏற்பட்டு வந்தது. எந்த ஒரு கட்சிக்கோ, அல்லது கூட்டணிக்கோ புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததே இதற்கு [...]

அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 200 பேர் பலி

படகு கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 200 பேர் பலி ஆனார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர். ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தது. [...]

ஊழல் புகார் எதிரொலி, `இஸ்ரோ’ முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் அரசு பணி ஏற்க தடை.

புதுடெல்லி, ரூ.2 லட்சம் கோடி எஸ்.பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில், இஸ்ரோ நிறுவன முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அவர்கள், வருங்காலத்தில் அரசுப்பணி ஏற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொலைத் தொடர்பு துறையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் புகார், நாடு தழுவிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த ஊழலைத் தொடர்ந்து, [...]

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, டெல்லி சிறையில் இருந்து ஆ.ராசா விடுதலை.

புதுடெல்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆ.ராசா, திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. ஆ.ராசா (வயது 49), தொலை தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் [...]

டெல்லி மேல்-சபை தேர்தல்: போட்டி வேட்பாளரை நிறுத்தினார் எடியூரப்பா – பாஜவுக்கு சிக்கல்

பெங்களூர், டெல்லி மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் ஆதரவாளர் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இதனால் கர்நாடக மாநில பா.ஜனதாவில் மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று எடியூரப்பாவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். எடியூரப்பாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் பெங்களூரில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுக்க பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் [...]

ஜூலை 22 ல், மதுரையில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் – இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு.

இந்திய விமானப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஏர்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேரடி தேர்வு முகாம் அடுத்த மாதம் ஜுலை 22 –ம் தேதி அன்று மதுரை, எம்.ஜி.ஆர். மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக சிறப்பு தேர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கணிதம், இயற்பியல், ஆங்கிலம், உள்ளிட்ட பாடங்களில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து [...]
error: Content is protected !!