இந்தியா49 Videos

ஆந்திரா ரெயில் விபத்து – 14 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஊப்ளியில் இருந்து பெங்களூர்  செல்லும் `ஹம்பி’ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் வழியாக சென்று மீண்டும் கர்நாடக மாநிலத்துக்குள் வந்து பெங்களூர் நகரை அடைகிறது. நேற்று இரவு ஊப்ளியில் இருந்து புறப்பட்ட ஹம்பி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.15 மணிக்கு அனந்தப்பூர்  அருகே பென்னி கொண்டா ரெயில் நிலையத்தை  நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த நிலையத்தில் அதே தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று [...]

கறுப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு கோர்ட்டுகள் – பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கறுப்பு பணம் குறித்து, பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தப்பட்டு வந்தது. இந்த பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி [...]

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, டெல்லி சிறையில் இருந்து ஆ.ராசா விடுதலை.

புதுடெல்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆ.ராசா, திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது. ஆ.ராசா (வயது 49), தொலை தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் [...]

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் – சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கும், மருத்துவக்கல்வி கவுன்சிலுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் ஜகதல்பூரில் என்.எம்.டி.சி. அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த 2006-2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அகான்ஷா அடிலே மற்றும் பிரியா குப்தா ஆகிய [...]

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்க, ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா ஹசாரே அழைப்பு

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கு கொள்ள வாருங்கள் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்து உள்ளார். ராணுவ தளபதி வி.கே.சிங், தனது பணியில் இருந்து வருகிற 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதன்பின்னர் அவருக்கு விருப்பம் இருந்தால் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்றும், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் எனவும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியதாவது:- நான் தனிப்பட்ட [...]

பாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பேச்சு.

பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது, ” மக்கள் பிரச்சனைகளுக்கு இருந்தாலும் பாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், முதல் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவையொட்டி, பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற மக்களவையும், மேல்-சபையும் காலை 11 மணிக்கு கூடின. `இந்திய பாராளுமன்றத்தின் 60 ஆண்டுகால [...]

ஹெலிகாப்டர் விபத்து, ஜார்கண்ட் முதல்-மந்திரி அர்ஜுன் முண்டா காயத்துடன் தப்பினார்.

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் ஜார்கண்ட் முதல்-மந்திரி காயத்துடன் தப்பினார். அவருடன் பயணம் செய்த மனைவி உள்பட 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவைச் சேர்ந்த அர்ஜுன் முண்டா, முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள சரேகேலா கார்சவான் மாவட்டம் குச்சாய் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அர்ஜுன் முண்டா வாடகை [...]

3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஹிலாரி கிளிண்டன்

கொல்கத்தா, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்தார். இரு தரப்பு உறவு, வர்த்தக வளர்ச்சி பற்றி அவர் இந்தியத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று அவர் வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கொல்கத்தா வந்து சேர்ந்தார். மதியம் 12.55 மணிக்கு கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச [...]

கூடங்குளம் அணு மின் உற்பத்தி 10 நாட்களில் தொடங்கும் – ஜெயலலிதா தகவல்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார். மாநாட்டில் பேசியபின் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு:- கேள்வி:- தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை பொறுத்த அளவில், அது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சினைக்குரிய [...]

சுக்மா கலெக்டர் பொறுப்பிலிருந்து அலெக்ஸ் பால் மேனன் விடுவிப்பு.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு 12 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார். தாட்மெட்லா வனப்பகுதியில் பொது மக்கள் முன்னிலையில் கலெக்டர் அலெக்சை மத்தியஸ்தர்கள் சர்மா, ஹர்சோபாலிடம் மாவோயிஸ்டுகள் ஒப்படைத்தனர். அடர்ந்த காட்டுக்குள் இருந்து சிந்தால்னர் பகுதிக்கு கலெக்டர் அலெக்ஸ் அழைத்து வரப்பட்டபோது இரவாகி விட்டது. தன்னை மீட்க உதவி செய்த முதல்- மந்திரி ராமன் சிங் உள்பட அனைவருக்கும் [...]
error: Content is protected !!