செய்தி2162 Videos

நாமக்கல்லில் செயின் பறிப்பு, 4 பேர் கைது 17 சவரன் நகை பறிமுதல்

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாகனங்களில் செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரண மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம் மேட்டுபாளையம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் பதுங்கியிருந்த கார்த்திக், சந்தானகுமார், ராஜா மற்றும் பந்தே நவாஸ் ஆகிய 4 [...]

தேமுதிக,திமுக கட்சியினர் 60 பேர் அதிமுகவில் ஐக்கியம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் சற்று முன் அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் தேமுதிக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக கட்சி துண்டுகளை அமைச்சர் வழங்கினார்.

குமாரபாளையம் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்ற நடவடிக்கை அமைச்சர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த மொள்ளபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாக்கடை நீர் பின்னேறி தரை வழி பாலத்தை மூழ்கடித்தது

நாமக்கல்,டூவீலரில் சென்றவரிடம் 2.20 லட்சம் பணம் கொள்ளை.

நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியை சேர்ந்தவர் சேகர், லாரி உரிமையாளர். லாரி பராமரிப்புச் செலவிற்காக நாமக்கல் நகரில் செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி, மற்றும் பெடரல் வங்கி ஆகிய இரு வங்கிகளில் தலா ஒரு இலட்சம் மற்றும்

நாமக்கல் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு.

நாமக்கல் கொசவம்பட்டி ஏரி பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்து கடையை விற்பனையாளர்கள் சுப்பரமணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பூட்டி சென்றுள்ளனர். இன்று மதியம் விற்பனைக்காக கடையை திறக்க வெங்கடேஷ் வந்த போது கடை பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்ட அவர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ரூ. 2 இலட்சம் ரூபாய் [...]

வெள்ளத்தில் சிக்கிய நாய், நான்கு மணி நேரம் போராடி மீட்பு.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றுப் பகுதியில் கடந்த ஒருவாரமாக வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு பால் அபிஷேகம்,

திருச்செங்கோடு ஆதி நாகேஸ்வரா் வழிபாட்டு குழு, சார்பில் திருச்செங்கோடு மலையில் உள்ள நாகேஸ்வரருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருச்செங்கோட்டில் உலக புகைப்பட தின விழா.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்  சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை சங்க உறுப்பினர்கள் வழஙகினர். இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில்  குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் முதல்வர், வெள்ளநிவாரணம் வழங்கினார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழஙகினார். முதலமைச்சரின் இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன்,தங்கமணி, சரோஜா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு, 2599 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு.

கடந்த  ஒருவாரமாக மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் வட்டத்தைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, 17 நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 857 குடும்பங்களைச் சேர்ந்த 2599 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய்த்துறையால் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முறையாக நடைபெறுவதை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால்  கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. தற்போதுமேட்டூர் மற்றும் பவானிசாகர் [...]
error: Content is protected !!