செய்தி2388 Videos

நாமக்கல் அருகே பெண்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் அருகே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்து வரும் பெணகள் கூலி உயர்வு கேட்டு துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனால், நாமக்கல் – துறையூர் சாலையில், ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது. நாமக்கல் அருகே, பொட்டிரெட்டிப்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஏரி ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். நாள்தோறும் அவர்கள் செய்த வேலையின் அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது, எனினும், [...]

குடிநீர் மாசு, திருச்செங்கோடு தனியார் சாய ஆலை மீது கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்.

குடிநீருக்கு ஆதாரமான நிலத்தடி நீரை மாசுபடுத்தும் திருச்செங்கோடு தனியார் சாய ஆலை மீது நடவடிக்கை எடுக்ககக் கோரி ஓ.ராஜபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். திருச்செங்கோடு ஒன்றியம் ஓ.ராஜபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தட்டாங்காடு, வரவங்காடு, கலரங்குட்டை, காமாட்சி நகர், அம்மாபாளையம் கிராமங்களாகும். இந்த கிராமங்களிலுள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்தே குடிநீ்ர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த கிராமங்களையொட்டியுள்ள மோரூர் மலை அருகே உள்ள தனியார் சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக [...]

நாமகிரிப்பேட்டையில் திமுக சார்பில் தண்ணீர் தொட்டி திறப்பு.

திமுக தலைவர் கருணாநிதியின் 90வதுபிறந்த நாளை கட்சியினர் ஆண்டு முழுவதும் கொண்டாட நாமக்கல் மாவட்ட திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், சீராப்பள்ளி, தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி  நிரந்தர தண்ணீர் தொட்டியை அமைத்துள்ளார். இதன் திறப்பு விழா நடந்தது.  முன்னாள் மத்திய இணை அமைச்சரும் திமுக மாவட்ட [...]

ராசிபுரம் அருகே இளம்பெண் எரித்து கொலை என புகார் – வெண்ணந்தூர் போலீஸ் விசாரணை

ராசிபுரம் வெண்ணந்தூரை அடுத்துள்ள சப்பையாபுதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் சக்திவேல் (27) டிரைவர். இவரது மனைவி செல்வி (24) இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அஸ்விதா(4) அஸ்வின் (1) என இரு குழந்தைகள் உள்ளனர். சக்திவேலின் சகோதரி சுமதி அடிக்கடி சக்திவேலிடம் பணம் கேட்டு வாங்கி செல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு செல்வி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் செல்வியின் மாமியார் சந்தி மற்றும் சுமதி ஆகியோர் [...]

நாமக்கல் கலெக்டர் மாற்றம். மத்திய நிர்வாக தீர்பாய உத்தரவால் பதவிக்கு ஆபத்து.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக டி.ஜகந்நாதன் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் சட்டநாதன் என்பவர் மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தில் டி.ஜகந்நாதனுக்கு முறைகேடாக ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நிர்வாக தீர்ப்பாயம் டி.ஜகந்நாதனின் ஐஏஎஸ் அந்தஸ்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜகந்நாதன்  மேல்முறையீடு செய்தார் இந்த வழக்க விசாரித்த நீதிமன்றம் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக [...]

அரசு மாணவர் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், சமையலர்கள், உணவு தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் தங்கமணி அறிவுரை.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் தங்கிப்படிக்கும் 23 மாணவிகளுக்கு காலை உணவு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  சிகிச்சைக்கு பின்பு மாணவிகள் அனைவரும் விடுதிக்கு திரும்பினர். இம்மாணவிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி ,கலெக்டர் வ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் விடுதிக்கு நேரில் சென்று மாணவிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அப்போது அந்த விடுதியில் மாணவிகளுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு காய்கறிகள், எண்ணெய் மற்றும் [...]

கோடையில் மின் வெட்டு வராது – அமைச்சர் தங்கமணி பேட்டி.

தமிழகம் மின் மிகை மாநிலமாக இருப்பதால், கோடை காலத்தில் மின்வெட்டு என்ற பேச்சிற்கே இடம் இல்லை என அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் தெரிவித்தார்.

திருச்செங்கோடு,விசைத்தறி உரிமையாளர் கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி, செம்மக்கல்மேடு பகுதியில் கடந்த 28.3.2018 அன்று டூவீலரில் சென்ற விசைத்தறி உரிமையாளர் குப்புசாமி(50) என்பவரை இரண்டு பேர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருச்செங்கோடு ரூரல் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி எனபவரது மகன் தனபால் (33) , ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த எத்துராஜ் எனபவரது மகன் கமலகண்ணன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற [...]

சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 7.6.2018 வியாழன்  காலை 10 மணிக்கு சிறுதானிய பயிர்கள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் என்ற

திருச்செங்கோட்டில் மதுவிலக்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அறிவுரையின் படி , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்  தலைமையில் இன்று  மதுவிலக்கு சம்மந்தமான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி (பயிற்சி)  கலந்து கொண்டு மதுவிலக்கு சம்மந்தமாக விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகளை மாணவ மாணவியருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மதுவிலக்கு காவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 1000 பேர்கள் [...]
error: Content is protected !!