செய்தி2151 Videos

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழா, மூத்த உறுப்பினருக்கு அழைப்பு இல்லை – காங்கிரசார் அதிருப்தி.

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழாவிற்கு இந்தியாவின் முதல் பாராளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினருக்கு அழைப்பு அனுப்படாததற்கு திருச்செங்கோடு நகர காங்கிரசார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவரும் சென்னை மாகணத்தின் முதல்வராக இருந்த டாக்டர் சுப்ராயனின் உறவினருமான டி.எம்.காளியண்ணன்(92) 1949ல் இந்தியாவின் முதல் பாராளுமன்றமாக கருதப்படும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர். திருச்செங்கோட்டில் தற்பொழுது வசித்து வரும் அவருக்கு நேற்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு [...]

பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை நாமக்கல் மாணவிகள் பெற்று சாதனை

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மூன்று மாணவிகள் முதல் மூன்று ரேங்குகள் பெற்று சாதனைபுரிந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். சென்னை டி.பி.ஐ. அலுவலக வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் தேர்வு [...]

மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்க கூடுதல் நிதி – கலெக்டர் தகவல்.

நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளில் மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கூடுதல் நிதி பெறப்பட்டுள்ளது. 60% விழுக்காடு உள்ள மனவளர்ச்சி குன்றியவர்கள் 1. மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதியுள்ள நபர்களின் தேசிய அடையாள அட்டை.2. வட்டாட்சியர் மூலம் உதவித்தொகை பெறவில்லை என கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று.3. பணம் பெறுபவர் மற்றும் மாற்றுத்திறனாளி இணைந்த புகைப்படம் – 3.4. குடும்ப அட்டை (இல்லை எனில்) கிராம நிர்வாக அலுவலரிடம் இருப்பிடச் சான்று.5. பணம் பெறுபவர் மற்றும் [...]

நாமக்கல்லில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டியவலசு ஊராட்சிக்கு உட்பட்ட குட்டலாடம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க மல்லூர் சென்றார். நாமக்கல்-சேலம் ரோட்டில் கீரனூர் பிரிவு அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்த இவர் மீது மதுரை கோட்டத்துக்கு சொந்தமான [...]

குமாரபாளையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய பூங்கா – அமைச்சர் பி.தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ.22 இலட்சம் மதிப்பிட்டிலான வளர்ச்சிப்பணிகளை தொழில்துறை அமைச்சர்   பி.தங்கமணி  பூமி பூஜை செய்து வைத்தும், முடிவுற்ற பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:- நாமக்கல், திருச்செங்கோடு, நகராட்சிப் பகுதியில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் புதிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. பொதுமக்கள் அளித்த பங்களிப்புத் தொகை ரூ.15 இலட்சம் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் ரூ.45 இலட்சம் [...]

மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி, 73 தலைமை ஆசிரியர்கள் “சஸ்பெண்டு”

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக 73 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக “சஸ்பெண்டு” செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகளுக்கு வழங்க, 2010-11, 2011-12-ம் ஆண்டுகளில் 99 பள்ளிகளுக்கு ரூ.81 லட்சம் நிதி காசோலையாக வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்து உள்ளது கல்வித்துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவற்றில் எவ்வளவு தொகை உரிய குழந்தைகளுக்கு சென்றடைந்து உள்ளது. போலியான பட்டியல் தயாரித்து [...]

பணியின்போது மரணமடைந்த நாமக்கல் போலீசாருக்கு முதல்வர் இரங்கல்

வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  வீராசாமி கடந்த 04.03.2012-ஆம் தேதி பணியிலிருந்தபோது வாகன விபத்தில் படுகாயமடைந்து 03.05.2012 இறந்துவிட்டார். அவருடைய மனைவி பழனியம்மாள் மற்றும் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த மாதேஸ்வரன் கடந்த 16.03.2012 அன்று உடல்நிலை பாதிப்படைந்து பணியிலிருந்தபோது இறந்துவிட்டார். அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகியோரது குடும்பத்திற்கு  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதங்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.கண்ணம்மாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் [...]

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க பொன்விழாவை ஒட்டி சிறப்பு மருத்துவ முகாம்.

திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொன்விழவை ஒட்டி சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொன்விழாவை ஒட்டி சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. முகாம் தொடக்க விழா லாரி உரிமையாளர்கள் சங்க பொன் விழா கட்டிடத்தில் நடந்தது.விழாவிற்கு திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனிதா வேலு தலைமை வகித்தார். சங்க செயலாளர் டி.என்.குருசாமி வரவேற்றார். ஆல் இந்திய மோட்டார் காங்கிரஸின் முன்னால் தலைவர் சண்முகப்பா, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை [...]

கொல்லிமலை புதிய தாலுகா தொடக்கம்.

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கொல்லிமலை தாலுகாவை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்.புதியதாக தொடங்கப்பட்ட கொல்லிமலை தாலுகா அலுவலக்த்திற்கு சென்ற பொதுமக்களிட்மிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.அருகில் நாமக்கல் சார் ஆட்சியர் அஜய்ஆதவ் உள்ளார்.
error: Content is protected !!