செய்தி2388 Videos

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் – பணம் செலுத்த மக்கள் குவிந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை.

திருச்செங்கோடு, திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் இணைவதற்கு நூறுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ரூ.1 கோடி பணம் செலுத்தினர்.நேற்றும் பணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.மேற்கண்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம்  மாவட்டம் மேட்டூர்,கருமலைக்கூடல் பகுதியில் தனியார் ஈமு நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் ஒன்பது பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்நிறுவனத்தின் சேவை மையம் திருச்செங்கோட்டிலும் உள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது தான் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தில்  ரூ.1 லட்சம் செலுத்தி இணையும் நூறு நபர்களுக்கு  மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 14 மாதங்களுக்கு வழங்கப்படும் [...]

8225 குடும்பங்களுக்கு 34,932 ஆடுகள் வழங்கல்- அமைச்சர் பி.தங்கமணி தகவல்.

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளிக்குட்டையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம் மற்றும், குப்பாண்டபாளையத்தில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 254 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன்  தலைமைவகித்தார்.  தமிழக தொழில்துறை அமைச்சர்  பி.தங்கமணி  254 குடும்பங்களுக்கு ரூ.31,11,000 மதிப்பிலான விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி விழாவில் பேசியதாவது :- தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்று குக்கிராமங்களில் உள்ள ஏழ்மையிலும், ஏழ்மையான [...]

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசு – அமைச்சர் வழங்கினார்.

நாமக்கல் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில்  59- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர்  டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுகள் மற்றும் கடனுதவிகள் வழங்கி விழாவில் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் கூட்டுறவுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் தொழில் முனைவோர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கவேண்டும் என உத்தரவிட்டதின் அடிப்படையில் கூட்டுறவு [...]

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அரசு பஸ் கண்டக்டர் பலி.

ராசிபுரம் அடுத்துள்ள பேளூக்குறிச்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்.இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு செல்வதற்காக மாதேஸ்வரன் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் போயர் தெரு பகுதியில் நடந்து சென்ற போது வீதியில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததாகத் தெரிகிறது.இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாதேஸ்வ்ரான் அருகே இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த [...]

உலக முதியோர் தின விழா கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர்  ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதியோர்கள் தாங்கள் வருவாய் ஈட்டும் காலங்களில் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும். அப்படி சேமித்து வைத்தால் வயதான காலத்தில் இந்த சேமிப்பு தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்-2007 தற்போது நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி முதியோர்களை தங்கள் பிள்ளைகள் பராமரிக்கவில்லையெனில் அவர்கள் இதுகுறித்து [...]

கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி அரசு ஊழியர்கள் ஏற்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் இன்று 12.6.2012 காலை 11.00 மணிக்கு கலெக்டர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், [...]

குடிநீர் விநியோக குழாயில் கள்ளத்தனமாக குழாய் அமைத்து குடிநீர் திருட்டு பொதுமக்கள் முற்றுகை.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மொஞ்சனூரில்  குடிநீர் குழாயில் பைப் அமைத்து தண்ணீர் திருடியவரை கண்டித்து, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராசிபுரம் அடுத்துள்ள மொஞ்சனூரைச் சேர்ந்தவர் ஜெயகோபால் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகில் மோகனூர்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பூமிக்கு அடியில் அமைத்து அதில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வையப்பமலை, அரசபாளையம், மொஞ்சனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். இந் நிலையில் ஜெயகோபால் [...]

திருச்செங்கோடு எல்ஐசி ஊழியர் மாயம்.

திருச்செங்கோடு கொல்லபட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவர் திருச்செங்கோடு எல்ஐசி கிளையில் எழுத்தராக இருக்கிறார். இவருக்கும் ஜெயகாந்தி (37) என்பவருக்கும் சுமார் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவியரசு (20) என்ற மகனும்  கவிப்பிரியா (18), கவி முகில் (16) ஆகிய மகள்களும் உள்ளனர்.  கடந்த 4-ந் தேதி காலை வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளமபிய ஆறுமுகம்  அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க [...]
error: Content is protected !!