செய்தி1907 Videos

குமாரபாளையம் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1.60 லட்சம் நூதன முறையில் வழிப்பறி.

குமாரபாளையம் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை நூதன முறையில் வழிப்பறி செய்த மோட் டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார்  தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வீணா எம்பிராய்டரிங் என்ற ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளை  குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளை யத்தில் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக சண்முகம் (வயது58) என்பவர் பணி யாற்றி வருகிறார். சீராம்பாளையத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வார [...]

கொல்லிமலை வல்வில்ஓரி விழாவை ஒட்டி புகைப்படம் மற்றும் ஓவியப்போட்டி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலாத்தலம் மற்றும் கோடைவாசஸ்தலமாக திகழ்கிறது. இங்கு அருள்மிகு அரப்பளீஸ்வரர் கோயில், மூலிகை மனம் கொண்ட ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, பழத்தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா இடங்களையும், இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. சுமார் 4000 அடி உயரம் கொண்ட இம்மலை உச்சியை அடைய 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இங்கு மலைப்பயிர்களான மிளகு, காபி போன்ற பயிர்களும், மா, பலா, வாழை மற்றும் அன்னாசி போன்ற பழவகைகளும், மரவள்ளி, கடலை போன்ற புஞ்சை [...]

புதியதலைமுறை அறிவியல் கண்காட்சி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் அக்ஷரா அகாடமி பள்ளி மாணவிகளும்,ராசிபுரம் எஸ்.ஆர்.வி எக்ஸல் பள்ளி மாணவரும் முதலிடம்.

திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதியதலைமுறை தொலைகாட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.கண்காட்சியை செங்குந்தர் பொறியியல் கல்லூரி இயக்குநர் பேராசிரியர் பாலதண்டபாணி தொடங்கி வைத்தார்.இந்த படைப்புகளை பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த 8 நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஜூனியர் பிரிவில் திருச்செங்கோடு அக்ஷரா அகாடமி சிபிஎஸ்சி பள்ளியைச் [...]

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசி குண்டம் திருவிழா இன்று நடந்தது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

திருச்செங்கோடு விவசாயிகளுக்கு அசோலா உற்பத்தி பயிற்சி

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் பகுதியில் அட்மா 2018-2019 ம் ஆண்டிற்கான மாவட்டத்திற்குள் பயிற்சி இனத்தில் அசோலா உற்பத்தி குறித்த பயிற்சி ஆனங்கூர் கால்நடை ஆஸ்பத்திரியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  இம்முகாமிற்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.  ஆனங்கூர் கால்நடை உதவி மருத்துவர் கெளதமன் கலந்து கொண்டு அசோலா தயாரிப்பு முறைகள், அசோலாவை கால்நடை தீவனமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தார்.  வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் [...]

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்யப்பட்ட வஃக்பு வாரியத்தின் சொத்துக்கள் மீட்கப்படும். வஃக்பு வாரியத் தலைவர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கைகாட்டி பள்ளிவாசல் மற்றும் எருமப்பட்டி பள்ளிவாசல்,  சேந்தமங்கலம் ஆகிய பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம் நாமக்கல் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சி.சந்திரசேகரன், நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் மற்றும்  எம்.பியுமான [...]

மொபைல் ஆப் மூலம் மஞ்சள் விற்பனை, முன்னோடியாகும் திருச்செங்கோடு டிஏபிசிஎம்எஸ்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரம் தற்போது மஞ்சள் விற்பனையில் முதன்மையானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டுள்ளது திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம்.

விலைவாசி உயர்வை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜகட்சி ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்

பொங்கல் விளையாட்டு விழாவில் தகராறு – பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் பொங்கல் விழா விளையாட்டி போட்டியை வேடிக்கை பார்த்தவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு,சீத்தாரம்பாளையம் பகுதியில் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.நேற்று மாலை பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.இந்த போட்டியை ரோட்டின் இருபக்கமும் நின்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வந்தனராம்.அப்பொழுது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பெருமாள்(19) என்ற கல்லூரி மாணவர் மீது டூவிலர் மோதியதாம் இதனால் இரு தரப்பினரிடையே [...]

திருச்செங்கோடு டெம்பிள் ஜேசிஐ சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி.

திருச்செங்கோடு,திருச்செங்கோடு டெம்பிள் ஜேசிஐ சங்கம் மற்றும் வள்ளுவர் மன்றம் ஆகியவற்றின் சார்பாக ராஜாகவுண்டம்பாளையம் நகராட்சி  பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஜேசிஐ டெம்பிள் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.வள்ளுவர் மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர் திலகவதி, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் செனட்டர் கோவிந்தசாமி, வள்ளுவன்,தென்றல்நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந் நிகழ்ச்சியில் சாணார்பாளையம், கூட்டப்பள்ளி, சூரியம்பாளையம், ஆகிய பகுதி [...]
error: Content is protected !!