செய்தி2151 Videos

நாமக்கல்லில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்

பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி பெருமாள் அசோகன் வேலுசாமி ஜெயமணி சுரேஷ் முன்னிலை வகித்தனர்.  இந்த போராட்டத்தின் போது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை 500 சதவீதம் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள் [...]

திருச்செங்கோட்டில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் சுதந்திரதின விழா .

திருச்செங்கோடு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் சுதந்திரதின விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உதயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.எஸ்.எஸ் திருச்செங்கோடு நகர செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். வக்கீல் குணசேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடதமிழக மாநில இணை அமைப்பாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.  இதனைத் தொடர்ந்து பாரதமாதா பூஜை  செய்தனர். இறுதியாக ஆர்.எஸ்.எஸ் நகர பொருளாளர் நடேசன் நன்றி கூறினார்.

சுதந்திர தின விழா, ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கல்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாக மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்ட அவர் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு அலுவல்களில் நற்பணி மேற்கொண்டவர்களுக்கு  பதக்கங்களை அணிவித்தார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதில் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளார் அருளரசு [...]

காவிரி கரை ஓர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், காவிரி கரையோர மக்களுக்கு இன்று வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அனுமதியற்ற மனைகள் வரைமுறைப் படுத்த முகாம்- திருச்செங்கோடு நகராட்சி அறிவிப்பு.

திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப் படுத்துதல் திட்ட முகாமும், விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு அனுமதி வழங்கும் சிறப்பு முகாமும் நடத்தப்பட இருப்பதால் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா  கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

கோயில் திருவிழாவில் மரம் வளர்க்க விழிப்புணர்வு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கணபதி நகர், கருப்பனார் கோயில் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் நம்ம திருச்செங்கோடு அமைப்பு சார்பில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 14 வகையான மரக்கன்றுகள் ஊன்றப்பட்டது.மேலும் மரம் வளர்ப்பதால் ஏற்படும் பலன்கள், மரக்கன்றுகளை பராமரித்தல், வளர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குமாரபாளையம், 70 சவரன் நகை திருட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த அம்மன் நகர் நேரு தெருவில் வசிக்கும் கிருத்திகாராணி என்பவரது வீட்டில் 70 சவரன் தங்க நகை திருட்டு குமாரபாளையம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குமாரபாளையம் வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்கள்- பரிசல் மூலம் மீட்பு.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரை ஓரப் பகுதி வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருப்பவர்களை பரிசல் மூலம் வருவாய்த் துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
error: Content is protected !!