குமாரபாளையம்124 Videos

2 கி.மீ வாய்க்காலை காணோம் குமாரபாளையம் தாசில்தாரிடம் புகார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவு கொண்ட 30 அடி அகலம் கொண்ட வாய்க்காலை காணோம் எனவும், அதனை கண்டுபிடிக்க கோரியும் குமாரபாளையம் தாசில்தாரிடம் தமிழக தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆதவன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல், குமாரபாளையம் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி தொழில்வரி குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியக் குழுவின் சார்பில் படைவீடு பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சிப் பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரி தொழில்வரி குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்ட வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடவேண்டும், சீரான குடிநீர் வழங்கிட வேண்டும், படைவீடு பேரூராட்சி [...]

சேவல்கட்டு சூதாட்டம், 10 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல்கட்டு சூதாட்டம் நடத்திய மணிகண்டன் பாலாஜி கரிமுள்ளா மற்றும் கோபால் சிவகுமார் உட்பட 10 பேரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட  34 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

தட்டாங்குட்டையில் கிராம சபைக்கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேசும் போது தெரிவித்தாவது,

குமாரபாளையம், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

குமாரபாளையம், அரசு பஸ் மோதி ஒருவர் பலி.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில்  கத்தேரி பிரிவு சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற  அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் மீது சேலத்திலிருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியது. விபத்தில் வடிவேலு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த- 4 பேர் கைது.

யூடியூப்பில் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளிபாளையம் அருகே கள்ள நோட்டு கும்பல் கைது, இயந்திரங்கள் பறிமுதல்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

குமாரபாளையம், காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (46)இவர் கோவை பீளமேடு பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார்.
error: Content is protected !!