குமாரபாளையம்124 Videos

அரசு பஸ் மோதி முதியவர் பலி

குமாரபாளையம் முதலியார் வீதியை சேர்ந்தவர் குஞ்சான்(63) இவர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலை குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் ரோட்டை கடந்து சென்றார். அப்போது கோவையிலிருந்து சேலத்துக்கு சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த குஞ்சான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தகராறில் வாலிபர் உயிரிழப்பு – தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள பள்ளிபாளையம்  கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று மாலை வாய் தகராறு காரணமாக தகராறில் ரமேஷ் என்பவர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சரண்ராஜ்(35) ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழப்பு.  தப்பியோடிய ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்

குமாரபாளையம் அருகே சொகுசு பேருந்து விபத்து, 4 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் தேசியநெடுஞ்சாலை பகுதியில் முன்னாள் சென்றுகொண்டிருந்த சவுக்குக் கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது பெங்களூருலிந்து கேரளா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த பேருந்து உதவி ஓட்டுநர் சித்தார்த், பந்தலம் பகுதியைச் சேர்ந்த மினி வர்க்கீஸ் என்ற பெண் மற்றும் அவரது மகன் ஆசல் லிஜோ  ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். [...]

குமாரபாளையம் நகராட்சி பூங்கா அமைக்க ரூ.25 லட்சம் கலெக்டரிடம் வழங்கினார் சேர்மேன்.

குமாரபாளையம் நகராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு பொதுமக்களின் பங்குத் தொகையாக ரூ.25 லட்சத்திற்கான காசோலை – கலெக்டர் ஜெ.குமரகுருபரன் அவர்களிடம் வழங்கப்பட்டது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு பொதுமக்களின் பங்குத் தொகையாக ரூ.25 லட்சத்திற்கான காசோலை – கலெக்டர் ஜெ.குமரகுருபரன் அவர்களிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் உழவர்சந்தை அருகில் 65 சென்ட் நிலப்பரப்பில் ரூ.75 லட்சம் செலவில் புதிய பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்காக தன்னிறைவு திட்டத்தின்கீழ் பொதுமக்களின் [...]

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

குமாரபாளையம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தை காயம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பள்ளிபாளையம் பகுதியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு குமாரபாளையம் நோக்கிச் சென்றது கலியனூர் அக்ரஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரம் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குழந்தை ஒன்று படுகாயமடைந்தது. விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிபாளையம், அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் பார்வையிட்டனர்.

விசைத்தறி தொழிலாளர் போனஸ் பிரச்சனை இழுபறி.

குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியும் முடிந்ததால், விசைத்தறி தொழிலாளர் போனஸ் பிரச்சனை இழுபறியுள் உள்ளது. குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்கப்பட்டு வரப்பட்டது.இந்த ஆண்டு முதல் தீபாவளிக்கு போனஸ் வழங்குவது குறித்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து எவ்வளவு சதவீதம் போனஸ் வழங்குவது என்பது குறித்து பிரச்சனை எழுந்தது. இப்பிரச்சனையில் உடன்பாடு எட்ட இரு தரப்பினரிடையே கடந்த 4 ம் தேதி [...]

வீணாகும் குடிநீர் கண்டு கொள்ளாத அதிகாரிகள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கன்னந்தேரி என்ற பகுதியில். பூலாம்பட்டி- ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உடைந்து கடந்த 20 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை 20 ஆயிரம் கனடியிலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் – பள்ளிபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன் தலைமையில் தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடஙகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டது
error: Content is protected !!