குமாரபாளையம்77 Videos

குமாரபாளையம், 650 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் – 5 ஆயிரம் அபராதம் 

  குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு கடைகளில் நகராட்சி ஆணையாளர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு,650 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்ததுடன் ரூ.  5 ஆயிரம் அபராதம் விதித்தார்.   

பள்ளிபாளையம் அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி திருமண மண்டம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் போலீசார் விசாரணை.

காவிரி கரை ஓர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை,இறையமங்கலம், மொளசி, சோழசிராமணி , பரமத்தி வேலூர் பகுதிகளில் காவிரி கரையோரம்  வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 19 தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பான இடஙகளுக்கு பொதுமக்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பள்ளிபாளையம், கிணற்றில் தவறி விழுந்து கணவன் மனைவி பலி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(45) விசைத்தறித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் லோகம்மாள் (50) இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிபாளையம் அடுத்த பெருமாள் மலைப் பகுதியில் இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை லோகம்மாள் குடிதண்ணீர் கொண்டு வருவதற்காக அருகே இருந்த விவசாய கிணற்றிற்கு சென்றார் உடன் முருகனும் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகம்மாள் கிணற்றில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முருகனும் [...]

புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் அடுத்த ,காடச்சநல்லூர் சத்யாநகர் பகுதியில், பிறந்து 1 நாள் ஆன பெண் குழந்தை முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது.  அப்பகுதி பொது மக்கள் குழந்தையை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் , பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளதனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து எஸ்பி அருளரசு உத்தரவின் பேரில் திருச்செங்கோடு மது விலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கள்ளத்தனமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 700 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தனியார் கல்லூரி மாணவியை கடத்த முயற்சி – இருவர் கைது

நாமக்கல் மாவடம், பள்ளிபாளையம் அடுத்த சமயசங்கிலி கதவணை அருகே கல்லூரி சென்று விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை அந்த வழியாகச் சென்ற ஆம்னி வேனில் கடத்த முயற்சி நடந்தது.மாணவியின் கூக்குரலை கேட்ட பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த கடத்தல்காரர்கள் மாணவியை விட்டு விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் கடத்தல்காரர்களை தேடினர்.பள்ளிபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆம்னி வேனில் வந்த சமயசங்கிலி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண [...]

வெப்படை அரசு பள்ளியில் சமூக விரோதிகள் தொல்லை.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தெற்கு பகுதி சுற்று சுவரில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலியை

குமாரபாளையம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தை காயம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று பள்ளிபாளையம் பகுதியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு குமாரபாளையம் நோக்கிச் சென்றது கலியனூர் அக்ரஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரம் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குழந்தை ஒன்று படுகாயமடைந்தது. விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!