குமாரபாளையம்124 Videos

குமாரபாளையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி – ஆட்சியர் ஆய்வு.

குமாரபாளையம் நகராட்சியில் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பூங்கா எத்தனை செண்ட் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அவ்வாறு பூங்கா அமையும்போது அதன் முகப்பு தோற்றம் மற்றும் பூங்காவின் உள்பகுதியில் செயற்கை நீரூற்று அமைத்தல், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதையும், பூங்காவிற்கு வருகைதரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள விலங்கினங்களின் சிலைகளின் வடிவமைப்பையும், பொதுமக்கள் அமருவதற்காக [...]

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 28 சவரன் நகை கொள்ளை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எதிர்மேடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுப்பிரமணி என்பவர் வீட்டில் சுமார் 28 பவுன் தங்கநகைகளும் விலைஉயர்ந்த வைரம்பதித்த நெக்லசும் கொள்ளை குமாரபாளையம் போலிசார் தடையங்களை சேகரித்து விசாரணை.

பள்ளிபாளையம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவர் மீட்பு, மூழ்கிய மற்றொரு மாணவரை போலீசார் தேடல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினர். இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் இருவரையும் மீட்க முயற்சி மேற்கொண்டனர். இதில் திருச்செங்கோடு, சீத்தாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜகணபதி என்ற மாணவர் மட்டும் மீட்கப்பட்டார். வெப்படை, ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த எபிநேசர் என்ற மாணவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் அலுவலர் சிவக்குமார் தலைமையில் விரைந்து வந்து [...]

குமாரபாளையம், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

குடிபோதை டிரைவருக்கு 1 மாதம் சிறை – திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி.

குமாரபாளையம், முப்பது பயணிகளுடன் குடிபோதையில் மினி பஸ்ஸை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று மாலை 7 மணிக்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மின் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை குமரேசன் (22) ஓட்டி வந்தார். பஸ்ஸில் 30 பயணிகள் இருந்தனர். ராஜம் தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாறுமாறாக வந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் பஸ்ஸை [...]

குமாரபாளையம் காவிரி ஆற்றில் ரகசிய குழாய்கள் மூலம் சாயக் கழிவுகள் கலப்பு. சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு.

குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுவதால் காவிரி ஆறு மாசடைந்து வருகிறது.இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய அனுமதியின்றி இயங்கிய சிறிய சாய ஆலைகளை இடித்து தள்ளினர். முறையாக அனுமதி பெற்ற பெரிய சாய ஆலைகள் மட்டும் இயங்கி வந்தன.இந்த ஆலைகளும் இரவு நேரங்களில் சாயக் கழிவுகளை சுத்திகரிக்காமல் [...]

பள்ளிபாளையத்தில் வெவ்வேறு இடங்களில் போராட்டம் – 40 பேர் கைது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், புகார் தெரிவித்தும் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள்

வெள்ளப் பாதிப்பு, திமுக எம்.எல்.ஏ மூர்த்தி உதவி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமன மூர்த்தி பார்வையிட்டு பாதிக்கபட்ட மக்கள் 600 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

உழவன் செயலி மூலம் வேளாண் துறை தகவல்கள் நேரடியாக பெறலாம் – வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

     நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரம் காடச்சநல்லூர் எஸ்.பி.கே பள்ளி கூட்டரங்கில் வேளாண்மைத்துறை–
error: Content is protected !!