குமாரபாளையம்59 Videos

அரசு பஸ் மோதி முதியவர் பலி

குமாரபாளையம் முதலியார் வீதியை சேர்ந்தவர் குஞ்சான்(63) இவர் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலை குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் ரோட்டை கடந்து சென்றார். அப்போது கோவையிலிருந்து சேலத்துக்கு சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த குஞ்சான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக் கணக்கில் மோசடி – பெண் உள்பட 3 பேர் கைது

குமாரபாளையம் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட 3 பேரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் சீனி வாசன் என்கிற சீனுபெர்லின் (வயது 43). இவரது மனைவி மேரி வஜிலா(36). இவர்களும் வேலூர் மாவட்டம் ஊத் தங்கரை அருகே உள்ள சேவாத்தூர் புதூரை சேர்ந்த ஸ்டீபன் ரோஸ்(32) என் பவரும் கூட்டாக சேர்ந்து, அரசாங்கத்தில் [...]

உழவன் செயலி மூலம் வேளாண் துறை தகவல்கள் நேரடியாக பெறலாம் – வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

     நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரம் காடச்சநல்லூர் எஸ்.பி.கே பள்ளி கூட்டரங்கில் வேளாண்மைத்துறை–

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 28 சவரன் நகை கொள்ளை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எதிர்மேடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுப்பிரமணி என்பவர் வீட்டில் சுமார் 28 பவுன் தங்கநகைகளும் விலைஉயர்ந்த வைரம்பதித்த நெக்லசும் கொள்ளை குமாரபாளையம் போலிசார் தடையங்களை சேகரித்து விசாரணை.

குடிபோதை டிரைவருக்கு 1 மாதம் சிறை – திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி.

குமாரபாளையம், முப்பது பயணிகளுடன் குடிபோதையில் மினி பஸ்ஸை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று மாலை 7 மணிக்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மின் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை குமரேசன் (22) ஓட்டி வந்தார். பஸ்ஸில் 30 பயணிகள் இருந்தனர். ராஜம் தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாறுமாறாக வந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் பஸ்ஸை [...]

குமராபாளையம் சாயப்பட்டறைகள் முடக்கம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி இரவு நேரங்களில் இயங்கும் சாயபட்டறைகள் சாய கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாக வந்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வட்டாட்சியர் ரகுநாதன் தலைமையில் பலத்த போலிஸ் பாதுகாப்பபுடன் நள்ளிரவில் திடீர் ஆய்வு 4 சாயபட்டறைகளுக்கு சீல் வைப்பு 2 சாயபட்டறைகளுக்கு மின்சாரம் துண்டிப்பு.

குமாரபாளையத்தில் லாரியின் பின்னால் பஸ் மோதி விபத்து – 2 பேர் பலி.

குமாரபாளையம், பெங்களூரில் இருந்து கர்நாடக அரசு பஸ் கோவை நோக்கி சென்றது. பஸ்சை டிரைவர் ராஜேஸ் ஓட்டினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 அளவில் குமாரபாளையம் அருகே பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி கிரானைட் கல் ஏற்றி சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது வேகமாக சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து லாரியின் பின்னால் மோதியது. இதில் கேரள மாநிலம் திருச்சூர், காஞ்சானி ரோடு [...]

குமாரபாளையத்தில் 500 கிலோ ரேசன் அரிசி,7 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்.

திருச்செங்கோடு தாலுகா குமாரபாளையம் பகுதி ஓட்டலிலிருந்து 500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கியாஸ் சிலிண்டர்களை வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்,எடப்பாடி ரோடு, சேலம் ரோடு ஆகிய பகுதிகளில்  செயல்பட்டு வரும் டீக்கடைகள்,ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்பொழுது குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டலிலிருந்து 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதேபோல் டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட [...]
error: Content is protected !!