குமாரபாளையம்97 Videos

குமாரபாளையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய பூங்கா – அமைச்சர் பி.தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கும் ரூ.22 இலட்சம் மதிப்பிட்டிலான வளர்ச்சிப்பணிகளை தொழில்துறை அமைச்சர்   பி.தங்கமணி  பூமி பூஜை செய்து வைத்தும், முடிவுற்ற பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:- நாமக்கல், திருச்செங்கோடு, நகராட்சிப் பகுதியில் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் புதிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. பொதுமக்கள் அளித்த பங்களிப்புத் தொகை ரூ.15 இலட்சம் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் ரூ.45 இலட்சம் [...]

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குமாரபாளையம், 70 சவரன் நகை திருட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த அம்மன் நகர் நேரு தெருவில் வசிக்கும் கிருத்திகாராணி என்பவரது வீட்டில் 70 சவரன் தங்க நகை திருட்டு குமாரபாளையம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

குமாரபாளையம் அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் கைது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளிக்கு  6 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.இருவரும் அருகே  உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். பள்ளியிலிருந்து மாலை வீடு திரும்பிய இரு சிறுமிகளும் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சரத்குமார் ( வயது [...]

விபத்து கேபிள் டிவி ஊழியர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்டமலை என்ற பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து மீது இரண்டு சக்கர வாகனம் மோதியதில் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியினை சேர்ந்த கேபிள் டிவி ஊழியர் தணிகாசலம் உயிரிழப்பு அவருடன் பின்னால் அமர்ந்து வந்த வேல் என்பவர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி குமாரபாளையம் போலிசார் விசாரணை

சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பள்ளிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக அரசை கண்டித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரி உட்பட 100 சதவீதம் வரை வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது.  இந்த வரி உயர்வால் ஏழை எளிய சாதாரண நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மீது வாடகை சுமை அதிகமாகும் நிலைமை ஏற்படும்           தமிழக அரசின் [...]

நோயாளிகளுக்கு பரிவுடன் சேவை செய்ய வேண்டும் -செவிலியர்களுக்கு மருத்துவ அதிகாரி பேச்சு.

குமாரபாளையம், குமாரபாளையம் அன்பு செவிலியர் கல்லூரியில் தீபம் ஏந்தி சேவை உறுதியேற்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் அன்பழகன் விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். செவிலியர் கல்வித்துறை தலைவர் பேராசிரியர் லதா வரவேற்றார். ஈரோடு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செங்கோட்டையன் சிறப்புரையாற்றியபோது பேசியதாவது: மருத்துவர்களின் பணிச்சுமையை செவிலியர்கள் தான் குறைக்கின்றனர். அது போலவே நோய் கொடுமையால் பாதிக்கப்பட்டு தொல்லைபடுவோரை பரிவோடு அணுகி அவர்களை நோயின் பிடியிலிருந்து மீளச்செய்யும் பெரும் பங்கும் செவிலியர்களுக்கே உண்டு. மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பாலமாக [...]

மக்களை தேடி வருவாய்த்துறை, 200 ஊராட்சிகளில் அம்மா திட்டம் முகாம் – ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமங்களில் மக்களை தேடி வருவாய்த்துறை எனும் அம்மா திட்டம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பேசியதாவது: ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோன்று ஒவ்வொரு மாதமும், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர் அளவில் ஏதாவது ஒரு கிராமத்தில் [...]

குமாரபாளையம் பட்டதாரி பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரிநகர் பகுதியினை சேர்ந்த சதீஷ் என்பவரின் மனைவி ஜனனி(22) என்பவர் குடும்பதகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை காதல் திருமணம் நடைபெற்று 90 நாட்களில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டதால் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை.

வெள்ளப் பாதிப்பு, திமுக எம்.எல்.ஏ மூர்த்தி உதவி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமன மூர்த்தி பார்வையிட்டு பாதிக்கபட்ட மக்கள் 600 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
error: Content is protected !!