குமாரபாளையம்122 Videos

கிராமங்களுக்கு இன்னும் 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் தகவல்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைத்தல், அங்கன்வாடி மையம்,நியாய விலை கடை உள்ளிட்ட திட்டங்களை மது விலக்கு மற்றும் ஆய தீர்வை துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தடையில்லாத  மின் வினியோகம் வழங்கும் வகையில் 1659 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இப்பணிகள் [...]

மாமூல் எதிர்பார்த்து, அமைச்சர் மீது வீண் பழி, திமுக மீது அதிமுக புகார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் பார்களில் மாமூல் கிடைக்காததால் வேண்டும் என்றே அமைச்சர் தங்கமணி மீது திமுகவினர் வீண் பழி சுமத்துவதாகவும், மேலும் அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனை கண்டிப்பதுடன், இதனை எதிர்த்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்க தெருமுனை பிரசாரங்களை செய்யப்போவதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் தங்கமணி பதவி விலக வலியுறுத்தல்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகள் குறைப்பதாக தெரிவித்துவரும் தமிழக  மின்சாரம்,மதுவிலக்கு

பள்ளிபாளையம், டூவீலர் திருட்டு பழைய இரும்பு வியாபாரிகள் இருவர் கைது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அம்மன் கோயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட் ஒன்றை இருவர் தள்ளிக் கொண்டு சென்றனர்.

காடச்சநல்லூர் கூட்டுறவு வங்கி முற்றுகை – கொமதேகவினர் போராட்டம்.

பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2016 ம் ஆண்டு 39 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான பிரிமியம் தொகை பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குமாரபாளையம் அருகே மணல் திருட்டு- மினி ஆட்டோ பறிமுதல்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதி காவிரி ஆற்று கரை ஓரமாக வாகனம் மூலம் மணல் திருட்டு நடப்பதாக குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதனுக்கு தகவல் கிடைத்தது.

பள்ளிபாளையம் அருகே,விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் ஒன்றியம் அம்மாசிபாளையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சம்பூரணம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும், முதியோர் பென்ஷன் தொகை பெறும் வயதானவர்களுக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அம்மாசிபாளையத்தில் பழுதடைந்த தார் சாலையை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட வேண்டும்,அம்மாசிபாளையம் அருகில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்க [...]

பள்ளிபாளையத்தில் வளர்ச்சி திட்டப் பணி- அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஆவாரங்காடு மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 55 லட்ச ரூபாய் செலவில் தார் சாலைகள் மற்றும் தடுப்பு சுவர் அமைப்பதற்கு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வை துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம், அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் பார்வையிட்டனர்.
error: Content is protected !!