உங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.

ஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது. லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஆசையோடு வாங்கிய மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தி இ மெயில்  Facebook   போன்றவற்றில் வரும் தமிழ் எழுத்துக்களை  (fonts) படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக வருவதால் நொந்து நூலாக உள்ள உங்களுக்கு மொபைல் போனில் தமிழ்படிக்க எளிய வழி …

கீழே சொன்னவற்றை கவனமாக பின்பற்றுங்கள்…

உங்கள் மொபைலிலிருந்து www.getjar.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.அதில் உள்ள search bar இல் opera mini என்று டைப் செய்து ok கொடுங்கள்.அதில் வரும் opera mini சாப்ட்வேர் ஐ உங்கள் மொபைலில் install செய்யுங்கள்.பிறகு உங்களுடைய இன்டர்நெட் இணைப்பை close செய்துவிட்டு உங்கள் மொபைலின் மெனுவில் சென்று opera என்ற application ஐ ஓபன் செய்யுங்கள்.opera mini யில் Address bar இல் opera:config என டைப் செய்ய வேண்டும். அந்த page இல் Power-user settings என்று வரும். அந்த செட்டிங்க்ஸில் No என்று குறிப்பிடப்பட்ட அனைத்தையும் Yes என்று மாற்ற வேண்டும்.இப்பொழுது உங்களுது மொபைலில் தமிழ் வெப்சைட்களை அழகாக படிக்க முடியும். முயற்சித்துப் பாருங்கள்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!