அலகாபாத்தில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கரேலி என்னுமிடத்தில் உள்ள குடிசைப்பகுதி உள்ளது. அதற்கு அருகே இருந்த குப்பையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அருகே இருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

`இந்த சம்பவத்தை அடுத்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இது குறித்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்’ போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த குடிசைப்பகுதிகளில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் வசித்துவருவதாகவும், அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு அங்குள்ள குப்பைக்கழிவுகளை விற்று பிழைப்பு நடத்தி வருபவர்களும், தினக்கூலி வேலை செய்பவர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *