ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய முறை - கபில் சிபல் அறிவிப்பு

அடுத்த ஆண்டில் (2013) இருந்து ஐ.ஐ.டி, என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் பொது நுழைவுத்தேர்வில் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது. மாணவர் சேர்க்கையில், அவர்கள் பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மெயின் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என இரு தேர்வுகளை எழுத வேண்டும்.

ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கும் தலா 50 சதவீத `வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் அளிக்கப்படும். இவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் மட்டும் அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அட்வான்ஸ் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!