ஜூலை 22 ல், மதுரையில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் - இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு.

இந்திய விமானப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஏர்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேரடி தேர்வு முகாம் அடுத்த மாதம் ஜுலை 22 –ம் தேதி அன்று மதுரை, எம்.ஜி.ஆர். மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக சிறப்பு தேர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கணிதம், இயற்பியல், ஆங்கிலம், உள்ளிட்ட பாடங்களில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இது தொடர்பாக மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல், எலெக்ரிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்டுமென்டேசன் டெக்னாலஜி, ஐ.டி., பாடப்பிரிவில், டிப்ளமோ இன்ஜினியரிங், இதை முடித்தவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் 1.7.1991-ம் ஆண்டு முதல் 30.1.1995-ம் ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வு முகாமில் தேவையான கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்றுடன் நேரில் வரவும், கல்விச்சான்றிதழ்களை மேற்படிப்புக்காக கல்லூரிகளில் ஒப்படைத்தவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வரும்போது HB பென்சில், ரப்பர், கருப்பு அல்லது நீள நிற பால்பாயிண்ட் பேனா மற்றும் விளையாட்டு உடை, உடல் திறன் தேர்வுக்கு சார்ட்ஸ் மற்றும் ஷூ ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

முகாமில் எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் முகாமிலேயே வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.indianairforce.nic.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு வேலை வாங்கித்தருகிறேன் என கூறும் போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என இளைஞர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் இதுகுறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண். 044 – 22390561 என்ற எண்ணிலும், 9445299128 அல்லது 044 – 22396565 Extn 7833 என்ற எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை, ஏர்மென் தேர்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!