ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – அரை கிலோ
காரட், பீன்ஸ், குடைமிளகாய் – தலா 100
வெங்காய தாள் – 10
அஜினோமோடோ – 1 சிட்டிகை
சோயாசாஸ் – 1 ஸ்பூன்
பூண்டு – 8 பல்
பெரிய வெங்காயம் – 3
ரீபைன்டு ஆயில் – 200
உப்பு, ப.மிளகாய் – தேவைக்கு

செய்முறை:

பாசுமதி அசிரியை உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டை தோலுடன் தட்டிப் போடவும்.

நறுக்கிய வெங்காயம் ப.மிளகாய், கறிவேப்பிலை, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கவும் அடுத்து அஜினோமோட்டோ சேர்த்து காய்கறிகள் வேகும்வரை வதக்கவும்.

எல்லாம் நன்றாக வெந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காய தாள்கள் போட்டு லேசாக வதக்கவும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி நன்றாக கலந்து, அதில் ஆறிய சாதத்தை கொட்டி சேர்த்துக் கிளறவும். முந்திரிப் பருப்பை நெய் விட்டு வறுத்து மேலே தூவவும்.சுவையான ஃப்ரைடு ரைஸ் ரெடி.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!