விஜயின் தலைவா படத்தில் டம்மியான அமலாபால்.

Thalaiva_movie_Stillsதுப்பாக்கி படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா.இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். தலைவா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் திடீரென ராகிணி என்ற பாலிவுட் நடிகையை இன்னொரு கதாநாயகியாக இணைத்துள்ளனர்.இப்படத்தில் அமலாபால் கதை நாயகியாக இருந்தாலும் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்குதான் தற்பொழுது பாலிவுட் நாயகி ராகிணியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குநர் விஜய். இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் அமலாபால். ஆரம்பத்தில் இன்னொரு நடிகையும் சிறு கேரக்டரில் நடிப்பார் என்ற இயக்குனர் விஜய். அந்த நடிகை விஜயுடன் டூயட்பாடுவார் என கூறவில்லையாம்.இந்நிலையில் நடிகர் விஜய் ராகிணியின் கேரக்டரை வெயிட்டாக்க கூற இயக்குனர் விஜயும் ராகிணியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.தலைவா படத்தின் மூலம் இன்னொரு ரவுண்ட் வரலாம் என நினைத்த அமலாபால் தலைவா படக்குழுவின் இந்த நடவடிக்கையால் ஆடிப்போய் இருக்கிறாராம்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *