திருச்செங்கோட்டில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி 130 மாணவர்கள் பங்கேற்பு.

www.mysangamam.com gallery
திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராஜசேகர் பரிசுகளை வழங்கினார்.

திருச்செங்கோட்டில் கடந்த 25 நாட்களாக கோடைகால ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி முகாம்  திருச்செங்கோடு விருக்ஷõ குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமின் இறுதி நாளான நேற்று நாமக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஸன் சார்பில் மாவட்ட அளவிலான ஓப்பன் சாம்பியன் ஷிப் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் 130  மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ரிங்  1, ரிங் 2 என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆறு வயது முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதற்கான நிகழ்ச்சிக்கு மிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் அமைப்பின் நிர்வாகி ராஜசேகர் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட ஸ்கேட்டிங் அகடாமி செயலாளர்  மணிரஞ்சன் வரவேற்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக விருக்ஷõ குளோபல் பள்ளியின் தாளாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!