முட்டை விலை உயர்வு.

eggsநாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை 7 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மேலும் 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.02ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி பகுதி வங்கக் கடலில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும் முட்டை நுகர்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், முட்டை விலையும் குறைக்கப்பட்டு கடந்த 6-ஆம் தேதி ரூ.2.60ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட ஆசாட விரதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, அங்கு முட்டை நுகர்வு அதிகரிக்கத் தொடங்கியது.வட மாநிலங்களில் முட்டை விலை உயர்ந்ததை அடுத்து, நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி, முட்டைப் பண்ணைக் கொள்முதல் விலை புதன்கிழமை ஒரே நாளில் 7 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.90ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், நேற்று மேலும் 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.02ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலை மேலும் உயரக்கூடும் என்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

பிற மண்டலங்களில் நிலவும் விலை: சென்னை-ரூ.3, பெங்களூர்-ரூ.2.85, மைசூர்-ரூ.2.87, ஹைதராபாத்-ரூ.2.48, மும்பை-ரூ.2.82, விஜயவாடா-ரூ.2.55, கொல்கத்தா-ரூ.3.10, பர்வாலா-ரூ.2.53, தில்லி -ரூ.2.63.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!