தேசிய கால்பந்து போட்டி, நாமக்கல் மாவட்ட மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று சாதனை - கலெக்டர் பாராட்டு.

Namakkal_FootBall_Championsதேசிய அளவிலான எ-சைடு (A-SIDE) கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கால்பந்து போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. முதலாவது ஜுனியருக்கான தேசிய அளவில் 9 பேர் கொண்ட கால்பந்து சாம்பியன்சிப் 2013 க்கான போட்டி மே மாதம் 4 ந்தேதி முதல் 7 ந்தேதி வரை சௌகான் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தைச்சார்ந்த எஸ்.முகமது இப்ராஹிம், சி.மணிகண்டன், டி.தமிழ்ச்செல்வன், பிரவின்குமார், ஜே.பூவரசன், ரியாஜ்அலி உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஜுனியர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். தேசிய கால்பந்து போட்டியில் சாதனை புரிந்த நாமக்கல் மாவட்ட மாணவர்களை கலெக்டர் டி.ஜகந்நாதன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *