நாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை.

turmericநாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை சரிந்துவருதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி  பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த சில வாரங்களாக மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மூட்டை ரூ. 10 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் சில வாரங்களிலேயே ரூ. 12 ஆயிரத்தை தாண்டியது. கூட்டுறவு சங்கத்தில் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 11750ம், தனியார் மண்டிகளில் ரூ. 12,250 வரையும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து சில வாரங்களாக மஞ்சள் விலை குறைந்துவந்தது. மஞ்சள் மூட்டை ரூ. 7 ஆயிரத்தற்கும் குறைவாக விலை இறங்கியதால் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்காமல் இருப்பு வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் விற்பனைக்கு மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் பனங்காலி மஞ்சள் ரகம் குறைந்தபட்சமாக ரூ. 9099க்கு விலை போனது. இதனால் மஞ்சள் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்று வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் 501  மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. விரலி ரகம் அதிகப்பட்சமாக மூட்டை ரூ.8399 க்கும் குறைந்தபட்சம் ரூ.6299க்கும் ஏலம் போனது. அதேபோல் குண்டு ரகம் அதிகபட்சமாக மூட்டை ரூ. 6439க்கும் குறைந்தபட்சம் ரூ. 5679க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ. 14,400க்கு விலை போனது. குறைந்தபட்சமாக ரூ. 9099க்கு விற்பனையானது.  விரலி 330 மூட்டைகளும் உருண்டை 148 மூட்டைகளும் பனங்காலி 53 மூட்டைகளும் என மொத்தம் 501  மூட்டைகளும் ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையானது. தற்பொழுது மஞ்சள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மஞ்சளை இருப்பு வைத்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *