எலுமிச்சைப் பழ சாதம்

lemon-rice

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம் பழம் பெரியது – 4
ந.எண்ணெய்-100
தேங்காய்-அரைமுடி
பு.அரிசி-1

செய்முறை:

எலுமிச்சை பழங்களிலிருந்து லேசாக சாறு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும் மீதி பழத்தை தண்ணீர் கலந்து பிழிந்து கொண்டு அத்துடன் தேங்காயை அரைத்து கலந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சட்டியில் ந.எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வெடிக்கவிட வேண்டும்.கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயப் பொடியை எ.பழச்சாற்றோடு கலக்க வேண்டும்.அது கொதித்து சுண்டி வரும்போது,(அந்த சாற்றில் மஞ்சள்தூள் உப்பு போட்டு கலக்கி வைக்கவும் சாறை ஊற்றி மல்லித்தழை போட்டு உடனே இறக்கிவிடவும்.

பின்குறிப்பு:

புழுங்கல் அரிசி சாதம் 1 கிலோ பதமாக வடித்து தட்டில் கொட்டி ஆறவிட்டு, அதில் குழம்பு ஊற்றி கிளறவும் இதை ஒரே நாளுக்குத்தான் சாப்பிடலாம் மறுநாள் வைத்திருக்க முடியாது தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!