பரமத்தி வேலூர் அருகே லாரி டயர்கள் திருட்டு

tyre theftபரமத்தி வேலூர் அருகே, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 7 லாரி டயர்கள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான சிமெண்ட் குழாய் கம்பெனி பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டு புதூரில் உள்ளது. அங்கு மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் டிப்பர் லாரி ஒன்றை சண்முகம் நிறுத்தி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சிமெண்ட் குழாய் கம்பெனி மேலாளர் முருகன் கம்பெனிக்கு வந்தபோது, அந்த டிப்பர் லாரியில் இருந்த டயர் டிஸ்க் உள்பட 7 டயர்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கம்பெனி உரிமையாளர் சண்முகத்திடம் தெரிவித்தார்.

மேலும் இத்திருட்டு குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். 7 லாரி டயர்கள் மற்றும் டிஸ்க் திருட்டு போனதாக தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிஸ்க் மற்றும் டயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!