மோகனூர் அருகே இருவர் கொலை- போலீஸ் விசாரணை.

www.mysangamam.com gallery
கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ரங்கநாதன் மற்றும் வளர்மதியின் உடல்கள். புகைப்படம் : ஜெகதீசன்.

  மோகனூர் காந்தமலை முருகன் கோயில் அருகே வசித்து வந்த ஜோதிடரும் அவருடன் வாழ்ந்து வந்த பெண்ணும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனிப்படை  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்ட ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(50) ஜோதிடம் மற்றும் மாந்திரீக தொழில்செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இதே பகுதியைச் சேர்ந்தவர் மணி(எ) வளர்மதி(45) திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கும் ரங்கநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பழகி வந்ததற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ரங்கநாதனும், வளர்மதியும் மோகனூர் காந்தமலை முருகன் கோயில் பின்புறம் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் குடியேறினர்.இங்கு ரங்கநாதன் மாந்திரீகத் தொழிலைத் தொடர்ந்தார்.இந்நிலையில் இன்று காலை ரங்கநாதன் குடியிருந்த வீட்டின் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ரங்கநாதனின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு ரங்கநாதனும், வளர்மதியும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எஸ்பி கண்ணம்மாள் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இக்கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டுள்ள ரங்கநாதனுக்கு கரூர் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துகளை அபகரிக்கும் நோக்குடன் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா? இந்த கொலைகளை செய்த குற்றவாளிகள் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!