பரமத்தி வேலூரில் புதிய பேருந்து நிலையம் - தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.

www.mysangamam.com galleryநாமக்கல் மாவட்டம் வேலூர் தேர்வு நிலைய பேரூராட்சியில் ரூ.192.90 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும், புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும் விழாவில் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக நல்ல தரமான முறையில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. டுபிட்கோ கடனுதவி திட்டத்தின்கீழ் ரூ.97 இலட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கவும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டதின்கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்திற்கு கான்கிரீட் ஓடுதளம் அமைக்கும் பணியும், பொதுநிதி திட்டத்தின்கீழ் ரூ.19.70 இலட்சம் மதிப்பில் மின்சார வசதி, குடிநீர் வசதியும், ரூ.6.20 இலட்சம் மதிப்பில் பேருந்து நிலைய வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடைகள், உணவு விடுதிகள், கழிப்பிட வசதி, காத்திருக்கும் அறை, குடிநீர் வசதி, ஆகியவையும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் பேரூராட்சியில் கடந்த 2011 – 2012 ஆம் நிதியாண்டில் ரூ.223.70 இலட்சம் மதிப்பில் அபிவிருத்தி பணிகளும், 2012 – 2013 ஆம் நிதியாண்டில் ரூ.272.44 இலட்சம் மதிப்பில் அபிவிருத்தி பணிகளும் என மொத்தம் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத சமயங்களில் தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்காக டி.என்.பி.எல் நிறுவனம் மூலம் ஜெனரேட்டர் வசதியும் இந்த பேரூராட்சி பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் ரூ.2.50 கோடி மதிப்பில் வேலூர் பேரூராட்சிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும், பொதுமக்களுக்காக நிறைவேற்றி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், உ.தனியரசு, கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் கே.காந்திமுருகேசன், உதவி இயக்குநர் பேரூராட்சி செ.பழனியம்மாள், பேருராட்சி தலைவர் பொன்னிவேல் (எ) என்.பி. வேலுசாமி, வேலூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பி.பி.ராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர் ஆர்.நடேசன், செயல் அலுவலர் ஆர்.குருராஜன் உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!