இராசிபுரத்தில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி - மங்களபுரம் மாணவர் முதலிடம்.

www.mysangamam.com galleryஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது இந்திய மாநாடு  நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிங்களாந்தபுரம் முதல் பட்டணம் வரையிலான 10வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியை நாமக்கல் சி எம் எஸ் கல்லூரி நிறுவனர்  முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாராத்தான் போட்டியானது சிங்களாந்தபுரத்தில் தொடங்கி போடிநாய்க்கன்பட்டி , பிரிவுரோடு , மற்றும் காகாவேரி வழியாக பட்டணம்  வந்தடைந்தடைந்தனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்த சுரேஸ் முதலாவதாகவும் கொல்லி மலையை சேர்ந்த செல்லதுரை இரண்டாவதாகவும் வந்து வெற்றி பெற்றனர். பின்னர் 3-வதாக சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த வேலுமணி என்பவரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் விவசாய சங்க மத்திய குழு உறுப்பினர் ரங்கசாமி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர் நாமக்கல் ,சேலம் ஈரோடு, கருர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களே முதல் 2 இடங்களை பெற்றது. மகிழ்ச்சியளிப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!