கூட்டுறவு சங்கம் மூலம் வாழைத்தார் விற்பனை - அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

www.mysangamam.com galleryநாமக்கல் மாவட்டம் வேலூர் நகர கூட்டுறவு வங்கியில் குளிர்சாதன வசதியுடன் நவீன மயமாக்கப்பட்ட தலைமை அலுவலகத்தின் தரைத்தளம் திறப்பு விழா மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழைத்தார் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர்  டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படவேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவினரால் வங்கி நிர்வாகம் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கியினுடைய நோக்கம் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையினை பெற்று பயனுள்ள செயல்பாடுகளுக்கு கடன் வழங்கிட வேண்டும். சிறுதொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குதல், குறிப்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கினால் அவர்கள் கிராமப்புறங்களில் நல்ல முறையில் தொழில் செய்து பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை பொருத்தவரையில் தொழில் தொடங்குவதற்காக பெற்ற கடனை 95 சதவீத கடனை திருப்பி செலுத்தி வருகிறார்கள். எனவே மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிட வங்கிகள் முன்வரவேண்டும். இந்த நகர வங்கியைப் பொருத்தவரையில் சுமார் ரூ.46 கோடி முதலீடாக உள்ளது. வங்கியின் மூலம் பல்வேறு கடன் வழங்கப்பட்டாலும், அந்த கடன்கள், அந்த வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதனைத் தொடர்ந்து பொத்தனூரில் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாழைத்தார் கொள்முதல் செய்வதை, தொழில்துறை அமைச்சர் துவக்கி வைத்து பேசியதாவது: விவசாய பெருமக்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நியாயமான கட்டுபடியான விலை கிடைத்திட வேண்டும் என்பதற்குதான் தமிழக முதலமைச்சர் நோக்கமாகும். அதனடிப்படையில் தான் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக வாழைத்தார் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யும்பொழுது ஒரு வாழைத்தார் சுமார் ரூ.500 விற்பனை செய்ய முடியும், ஆனால் இந்த கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.750 வரை விலை கிடைக்கும். எனவே இந்த பகுதி விவசாயிகள் தங்கள் விலை நிலத்தில் உற்பத்தி செய்யும் வாழைத்தார்களை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம் என அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உ.தனியரசு, கே.பி.பி.பாஸ்கர், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவமுத்துகுமாரசாமி, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் வி.பி.ராஜமாணிக்கம், பேரூராட்சி தலைவர் பொன்னிவேல் (எ) என்.பி.வேலுசாமி, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் தென்னரசு, துணைத்தலைவர் என்.பி.நல்லதம்பி, மேலாண்மை இயக்குநர் ஆதிநாயகி, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!