திருச்செங்கோட்டில் மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு போட்டி நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மேன் பொன் சரஸ்வதி பரிசுகளை வழங்கினார்.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேர்மேன் பொன் சரஸ்வதி, ஜேசிஐ டெம்பிள் சங்கத்தின் தலைவர் சரவணகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் மற்றும் திருச்செங்கோடு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆகியவற்றின் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. 6 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு டைம் டிரையல் (ரிங்1) , ரேஸ் (ரிங்2), 1000 மீட்டர் ரேஸ் (ரிங்க்2ஏ) என பிரிவுகளாக நடைபெற்றது.இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும்  போட்டிகளில் வெற்றி பெற்ற 35  மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன்  மற்றும் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக போட்டிகளை கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.திருச்செங்கோடு நகராட்சி சேர்மேன் பொன் சரஸ்வதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.விழாவில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகடாமி இயக்குநர் சிந்தியா பாபு,ஜேசிஐ டெம்பிள் சங்கத் தலைவர் சரவணகுமார், முன்னாள் தலைவர் செந்தில்நாதன், செனட்டர் கோவிந்தசாமி, முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!