வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி - 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்புவெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி - 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

www.mysangamam.com galleryநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  வெண்ணந்தூர் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. கிராமப்புறத்தில் மாணவர்களிடையே விளையாட்டு திறனை ஊக்கவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது.

ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிப்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் இருந்து துவங்கிய போட்டியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியானது அனந்தகவுண்டம்பாளையம், வெள்ளப்பிள்ளையார் கோவில், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம் உள்ளிட்ட பகுதி வழியாக சென்று அக்கரைப்பட்டியில் முடிவடைந்தது.

சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இப்போட்டியில் எருமப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் கண்ணன் முதலிடத்தையும், பெத்தாம்பட்டியை சேர்ந்த மாணவர் மோகன்ராஜ் இரண்டாமிடத்தையும், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாணவர் மணிகண்டன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 5000, ரூ.3000, ரூ. 2000 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *