பரமத்தி வேலூர் அருகே லாரி டயர் திருடிய மூவர் கைது.

arrestedபாண்டமங்கலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான லாரி டயர்களை டிஸ்குகளுடன் திருடிய மூன்று பேரை பரமத்திவேலூர் போலீசார்  கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து டிஸ்குடன் டயர்கள் கைப்பற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரில்,  பொத்தனூரைச் சேர்ந்த சண்முகம்  என்பவர் சிமென்ட் பைப் தயாரிக்கும் தொழில்சாலை  நடத்தி வருகிறார். தொழில்சாலைக்கு  மணல், ஜல்லி எடுத்து வர ஒப்பந்த அடிப்படையில் இவர் லாரி ஒன்றை வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி காலை ஆலையின் மேலாளர் முருகன்  அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டிஸ்குடன் கூடிய 7 டயர்கள் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உரிமையாளர் சண்முகத்திற்கு அவர் தகவல் கொடுத்தார்.  இதைத் தொடர்ந்து, சண்முகம் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக, லாரியில் டயர்களுடன் வந்த  மூன்று பேரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சண்முகத்தின் தொழில்சாலையில் இருந்த லாரியில் இருந்து அவர்கள் டயர்களைத் திருடியது தெரிய வந்தது.

இது தொடர்பாக வெங்கரையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்செல்வன் (22), அதே ஊரைச் சேர்ந்த குருசாமி மகன் யுவராஜ் (19), குச்சிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாணிக்கம் (35) என்ற அந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்  அவர்களிடம் இருந்து  டிஸ்குகளுடன் கூடிய 7 டயர்களை கைப்பற்றினர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!