நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 21 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

turmericநாமகிரிப்பேட்டையில் 21 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடந்தது.

தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி  பல்வேறு தனியார் வியாபாரிகளும் மஞ்சளை வாங்கி வெளிமாநிலம், நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.   நேற்று வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் 643 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. விரலி ரகம் அதிகப்பட்சமாக மூட்டை ரூ. 8281 க்கும் குறைந்தபட்சம் ரூ. 7319 க்கும் ஏலம் போனது. அதேபோல் குண்டு ரகம் அதிகபட்சமாக மூட்டை ரூ. 6679க்கும் குறைந்தபட்சம் ரூ. 6171 க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் அதிகபட்சமாக ரூ. 14309க்கு விலை போனது. 384 விரலி மூட்டைகளும் உருண்டை 207 மூட்டைகளும் பனங்காலி 50 மூட்டைகளும் என மொத்தம் 643 மூட்டைகளும் ரூ.21லட்சத்திற்கு விற்பனையானது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!