மாவட்ட கிரிக்கெட் போட்டி, பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு.

நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்ற மாணவர்களை பாரத் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் கோகுலநாதன் பாராட்டினார்.
நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்ற மாணவர்களை பாரத் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் கோகுலநாதன் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு முகாம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற திருச்செங்கோடு பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்ஜெயபிரகாஷ் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட அணி வரும் 15 ம் தேதி சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாரத்பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கோகுலநாதன், டிரஸ்டி ஜெயகுமார், கல்லூரி முதல்வர் முருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *