மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான குழு விளையாட்டுப்போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு - பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு.

handycap_sportsநாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான பந்து எறிதல், கையுந்துபந்து, கூடைபந்து, கபாடி, இறகுபந்து, மேசைபந்து ஆகிய குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி விழாவில் பேசியதாவது :-

தமிழக அரசு விளையாட்டுத்துறைக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விளையாட்டுத்துறையை மேம்படுத்திவருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அளவில் இதுபோன்ற விளையாட்டுப்போட்டிகளை நடத்த உத்தரவிட்டதின் அடிப்படையில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற 82 வீரர் மற்றும் வீராங்கனைகளை மனதார பாராட்டுகிறேன். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற நீங்கள் இதுபோன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு,; தமிழக அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் பல வெற்றிகளைப்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எனப்பேசினார்.

முன்னதாக 400மீ தடகளப்போட்டி, கூடைபந்து, வாழ்சண்டை, பழுதூக்கும் போட்டி உட்பட தேசிய அளவில் சாதனைகளை புரிந்த 13 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.1,60,000க்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.பெரியகருப்பன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறன்படைத்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!