திருச்செங்கோட்டில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை.

TCD.19.1திருச்செங்கோட்டில் உலக நன்மை வேண்டி 1009 மஹா திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், திருச்செங்கோடு திருவிளக்கு பூஜை வழிபாட்டு கமிட்டி, ராமகிருஷ்ண ஆஸ்ரமம், சாரத சமிதி ஆகியவற்றின் சார்பில் உலக நன்மை வேண்டியும், சகோதரத்துவம் நிலவவும், சகிப்புத்தன்மை ஓங்கவும், சர்வமத நல்லிணக்கம் ஏற்படவும், நவக்கிரஹ தோஷம் நிவர்த்தி ஆகவும் வேண்டி திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் 1008 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜையை தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன் தொடங்கி வைத்தார். அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டத்தின் தலைவர் முருகேசன், அனைது வணிகர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணன், ஆர்விஆர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சாவித்திரி ராதா, சரோஜா தட்சிணாமூர்த்தி, ராஜேஸ்வரி லோகநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர். கரூர் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ராமானந்தா சுவாமிகள் திருவிளக்கு பூஜை வழிநடத்தினார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!