நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கு - அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Roller_Scatting_Ground_Namakkalதன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கை,  தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள முல்லைநகரில் சுமார் 2400 சதுர மீட்டர் பரப்பளவில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.13 லட்சம், அரசு ஒதுக்கிய நிதி ரூ.26 லட்சம் மற்றும் நகராட்சியின் பங்களிப்பான ரூ. 9 லட்சம்  என மொத்தம் ரூ. 48 லட்சம் செலவில்

நவீன ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில்,  ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கை தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி  திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது: இந்த ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கம் நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இதன் அருகேயுள்ள இடங்களில் இந்தப் பகுதி மக்களின் பங்களிப்புடன் புதிய பூங்காவை நகராட்சி சார்பில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் நாமக்கல் நகராட்சி மீது தனிக் கவனம் செலுத்தி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உரிய நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறார்.

எனவே, இத்தகைய வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன், நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்தி முருகேசன், நகராட்சித் துணைத் தலைவர் சேகர், நகராட்சிப் பொறியாளர் கமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *