மோகனூர் ஜோதிடர் மற்றும் பெண் கொலை வழக்கு - இருவர் கைது

arrestedமோகனூர் அருகே ஜோதிடரும் அவருடன், மனைவியாக வாழ்ந்து வந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கரூர் மாவட்ட ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(50) ஜோதிடம் மற்றும் மாந்திரீக தொழில்செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இதே பகுதியைச் சேர்ந்தவர் மணி(எ) வளர்மதி(45) திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கும் ரங்கநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் பழகி வந்ததற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ரங்கநாதனும், வளர்மதியும் மோகனூர் காந்தமலை முருகன் கோயில் பின்புறம் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் குடியேறினர்.இங்கு ரங்கநாதன் மாந்திரீகத் தொழிலைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், ஜூன் 29ஆம் தேதி காலை அவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றும் வீசுவதை உணர்ந்த அப்பகுதி மக்கள், மோகனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரங்கநாதன், வளர்மதி ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததாலும், காலாண்டரில் ஜூன் 26ஆம் தேதி காட்டியபடி இருந்ததாலும் அவர்கள் 26ஆம் தேதி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகித்தனர். இதை பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, இக்கொலைச் சம்பவம் குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீஸார் மேற்கொண்டிருந்த விசாரணையில், இக்கொலைகளை நாமக்கல் மாவட்டம் வேலூர் இடையார் சாலை அம்மன்நகரைச் சேர்ந்த சக்திவேலின் மனைவி சந்திரா(50), காட்டுப்புத்தூர் வடக்குமுத்துராஜாதெருவைச் சேர்ந்த மருதைவீரனின் மகன் சிவசெல்வராஜ்(41) ஆகியோர் கூலிப்படையை வைத்து இக்கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இந்தநிலையில், கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தநிலையில், சந்திரா, சிவசெல்வராஜ் ஆகியோர் மோகனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று சரணடைந்தனர்.

அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்திராவுக்கு அண்ணன் உறவுமுறையான ரங்கநாதனுக்கு பூர்வீக சொத்து இருந்துள்ளது. அந்த சொத்தை கைப்பற்றவும், தனது மகனை வேறு சாதி பெண்ணுக்கு ரங்கநாதன் திருமணம் செய்து வைத்துவிட்டதால் இருந்த முன்விரோதம் காரணமாகவும் சிவசெல்வராஜுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இந்த கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருவரையும் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-இல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இக்கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரான திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு, மதுரையைச் சேர்ந்த மதுரை, திருச்சியைச் சேர்ந்த மதன் ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *